போட்டிகள் வேண்டாமே
*தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்!* ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது. சட்டென்று மனதில் ஒரு எண்ணம். அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். மெதுவாய் அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன். இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்! ‘அப்பாடி, முந்தி விட்டேன்!’ பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே த...