Posts

Showing posts with the label விவசாயம்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...! 🌝 தவளை கத்தினால் மழை  🌝 அந்தி ஈசல் பூத்தால்  அடை மழைக்கு அச்சாராம்  🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்  🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது  🌝 தை மழை நெய் மழை 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்  🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும்  பள்ளத்தே பயிர் செய்  🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝 களர் கெட பிரண்டையைப் புதை  🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு 🌝 நன்னிலம் கொழுஞ்சி  நடுநிலம் கரந்தை  கடை நிலம் எருக்கு 🌝 நீரும் நிலமும் இருந்தாலும்  பருவம் பார்த்து பயிர் செய்  🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்  🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும் 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை  🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝 உழவில்லாத நிலமும்  மிளகில்லாத கறியும் வழ வழ  🌝 அகல உழவதை விட  ஆழ உழுவது மேல்  🌝 புஞ்சைக்கு நாலு உழவு  நஞ்சைக்கு ஏழு உழவு...