எது_எதனால்_கெடும்
01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெவிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) சிற்றின்பன் பெயரும் கெடும். 11) நாடாத நட்பும் கெடும். 12) நயமில்லா சொல்லும் கெடும். 13) கண்டிக்காத பிள்ளை கெடும். 14) கடன்பட்டால் வாழ்வு கெடும். 15) பிரிவால் இன்பம் கெடும். 16) பணத்தால் அமைதி கெடும். 17) சினமிகுந்தால் அறமும் கெடும். 18) சிந்திக்காத செயலும் கெடும். 19) சோம்பினால் வளர்ச்சி கெடும். 20) சுயமில்லா வேலை கெடும். 21) மோகித்தால் முறைமை கெடும். 22) முறையற்ற உறவும் கெடும். 23) அச்சத்தால் வீரம் கெடும். 24) அறியாமையால் முடிவு கெடும். 25) உழுவாத நிலமும் கெடும். 26)உழைக்காத உடலும் கெடும். 27) இறைக்காத கிணறும் கெடும். 28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும். 29) இல்லாலில்லா வம்சம் கெடும். 30) இரக்கமில்லா மனிதம் கெடும். 31) தோகையினால் துறவு கெடும். 32) துணையில்லா வாழ்வு கெடும். 33) ஓய்வில்லா முதுமை கெடும். 34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடு...