சகித்து வாழ பழகு

விசித்திர உலகில் எதிர்பார்க்காத அனைத்தும் நடந்தும்.........சகித்து வாழ பழகி கொண்டுள்ளோம்


'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும்
உன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' ...........
அதிகமான
புருஷன் பொண்டாட்டிக்கும்
இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே ...


நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை
எல்லாரும் ஹெல்மெட் அணிவது
போலீஸுக்கு பயந்து தானே..............தவிர உயிருக்கு
பயந்தல்ல ....

ஆஸ்பத்திரியில் நலம் விசாரிப்பதற்கு
நாலு நல்ல வார்த்தைகளை விட ..........
நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய்
இருக்கிறது ........


ஒரு வருடத்திற்கு முன்பு...... மணக்கோலத்தில்
நண்பனை சிரிப்போடும்.....................அவன் மனைவியை
கண்ணீரோடும் கண்டேன் ...........

ஒராண்டுக்குப்பின் கண்டபோது கண்ணீர்
இடம்மாறியிருந்தது .............


பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும் ..........
ஆனால் .....
ஆண்கள் ஒரு நாள் சமைக்குற பொருளை வைச்சு பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ................


காலையில எழுந்ததும்
Whatsapp ஓபன் பன்ற மாதிரி
சின்னபுள்ளையில
பாட புத்தகத்த
ஓபன் பன்னிருந்தா சிலர்
உருப்பட்டுருப்பாங்க......


ஓட்டலில் சர்வர்
என்ன சாப்புடுறீங்கன்னு
கேட்டாலே ஒழுங்கா பதில்
சொல்லத் தெரியல ...........
இதுல கடவுள் வந்து என்ன வரம் வேணும்னு
கேட்டா........ எப்படி சொல்லுவது ?


ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பெற்றோர்கள்
நம்மை அடிப்பதை நிறுத்திவிடுகிறார்கள் .................
பின்னர் ...
அவங்க கை வலிக்குதுனு
நமக்கு திருமணம் செய்து வைத்து
விடுகிறார்கள்



ஊருக்கே குறி சொல்லும் பூசாரி ,
ATM வாசல நின்னு............
பணம் இருக்கானு இன்னொருத்தன்ட்ட கேட்கிறார்........


இரவு கணவனை சாப்பிடவாங்கன்னு
மனைவி அழைத்தால்.......
சீரியல்  முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்

பந்தி பரிமாறுபவர்
நமக்கு நன்கு தெரிந்தவராயின்
மனதிற்குள் வரும் சந்தோசம் சுகமானது .....


பொண்டாட்டி யை
சமாதானப்படுத்த.....................
வீட்ல பீரோவில் கிடக்கும்
சேலையையே பேக் பண்ணி கிப்டா
கொடுத்துரனும்.........................
கண்டிப்பா தெரியாது .............
பீரோ பூரா அவ்ளோ சேலை ....


பேருந்தில் ஏறி அமர்ந்தவுடனே தூங்கிவிடுவது
வரம் ............
அவ்வரம் பெற்றவர் நம் அருகில்
அமர்ந்திருப்பது சாபம் ...!

ஒரு பெண்
ஒரு நிமிடத்தில் சேலை
செலக்ட் செய்கிறாள் என்றால்..........
அந்த சேலை வேறு யாருக்கோ என்று அர்த்தம் ....


நல்லா போய்க்கிட்டிருந்த பஸ்......... திடீர்னு குலுங்கி
குலுங்கி போக ஆரம்பிச்சா...
நாம பஸ்ஸ்டாண்டுக்கு உள்ள
வந்துட்டோம்னு அர்த்தம் ....


அம்மா இலவசமா கொடுத்த
ஆடு மாடு மட்டும்தான் இன்னும்
அம்மானு கத்திகிட்டு இருக்கு............... மீதி இருக்க
எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு
கத்துறாங்க.


முன்பு
ஆண்களுக்கு குட்டிச்சுவர் ,
டீக்கடை பெஞ்ச்..............
பெண்களுக்கு
வீட்டுத் திண்ணை
குழாயடி..........
ஆனால்.....
எல்லோருக்குமா
இப்போ வாட்ஸப் ஆயிடுச்சு


பெண்கள் எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒருவர் சொல்வதை கேட்டு அமைதியாக நிற்கிறார்கள் என்றால் ...............அவர் ஃபோட்டோகிராபர் ஆகத்தான் இருக்க வேண்டும்!!


பேசாமல் இருந்தால்..........
'ஏன் பேச மாட்டேன்ங்கிறீங்க?'
என்று
நச்சரிப்பதும்,
பேசினால்........... சண்டைக்கு
இழுப்பதும் மனைவியின் இயல்பு!!

புரிந்து நடந்து கொண்டால் வாழ்க்கை வசப்படும்...!

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*