நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு
*நாம் பெற்ற மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா?* *நாம் பெற்றிருக்கிற பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? நிபந்தனையற்றதா?* ஆண்டவராகிய இயேசு நமக்காய் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு பாவ மன்னிப்பை அருளி நம்மை இரட்சிக்கிறார். *“குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது”* (கொலோ 1:14). *“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது”* (எபே. 1:7). இந்த பாவமன்னிப்பு அவருடைய இரத்தத்தினாலே உண்டாகின்றபடியினாலே, அந்த பாவ மன்னிப்பிற்காக நாம் செய்ய வேண்டிய பிராயசித்தம் ஒன்றுமில்லை. *இலவசமாய் கிருபையாலே, அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பை கொடுத்து இரட்சிப்பை அருளுகிறார்.* _*ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதே!*_ மத்தேயு 18ம் அதிகாரத்தில் இதை விளக்கும்படி இயேசு ஒரு உவமையை கூறியுள்ளார். இந்த உவமையை நம்முடைய நடைமுறையில் சற்று விளக்கமாக பார்ப்போம். ஒரு பெரிய ராஜாவிடம், *பீட்டர் என்பவன் 10000 தாலந்து கடன்பட்டுள்ளான்.* ஒரு தாலந்து என்பது...