பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி?
பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி?
1.பெண்கள் போன் செய்தால் உங்கள் மனைவியையும் பேச வையுங்கள்.
2. வீடு விசிட்டிங் 100 சதவீதம் முடியாது கூடுமானவரை தனியாக செல்லாமல் உங்கள் மனைவியோடு செல்லுங்கள். திருமணம் ஆகாத ஊழியக்காரர் உடன் ஊழியர் அல்லது சகோதரர்களோடு செல்ல வேண்டும்.
3.பெண்கள் முதியோர் இல்லம் பெண் பிள்ளைகள் அனாதை இல்லம்
பெண்கள் ஹாஸ்டல்
இவைகளை பெண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும்.
அதைப் போல ஆண்கள் இல்லங்களை ஆண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும்.
இந்த விசயத்தில் நிறைய பாஸ்டர்மார்கள் மாட்டிக் கொண்டு சிறையில் இருக்கிறார்கள்.
4..திருச்சபை மற்றும் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும்.
5.மறுபாலரை அம்மா சகோதரி மகளே என்று அழைப்பது மட்டும் அல்ல அந்த உறவுகளை உள்ளத்திலும் ஆழமாக வேரூன்றி பதிக்க வேண்டும்.
6.இரவு நேரங்களில் உதவி செய்ய கூட தனியாக போய் விடக்கூடாது.
7.ஒரு வேளை பிளாக் மெயிலில் சிக்கி விட்டால் குடும்பம் மற்றும் முக்கியமானவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். உடனே யோசிக்காமல் காவல்துறை யில் புகார் தெரிவிக்க வேண்டும்.
8.திருச்சபை மற்றும் வீட்டு பத்திரங்கள் மற்றும் முக்கிய டாக்குமெண்ட்களை நைசாக பேசி கவிழ்க்க நினைக்கும் பெண்கள் கையில் கொடுக்க கூடாது.
9.பெண்கள் தானே என்று மனஸ்தாபம் கொண்டு அன்பின் காரணமாக கூட ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
10.ஆத்திர அவசரத்திற்கு கூட அது விசுவாசியாக கூட இருக்கலாம் பெண்களை தனியாக வாகனத்தில் ஏற்றி செல்லாதீர்கள். விபத்து என்றால் உதவி செய்யலாம்.
நண்பர்களே இந்த பத்து காரியங்களும் கர்த்தரின் ஊழியங்கள் செய்யும் பெண்களுக்கும் பொருந்தும். ஆண்பாலருக்கு நீங்கள் உங்களை விலக்கி காத்துக் கொள்ள வேண்டும்.
இது என்ன பெரிய ஆலோசனையா
இவர் என்ன சொல்றது நா என்ன கேட்கிறது ன்னு இருக்காதீர்கள்.
கடைசி காலம் நாம் யுத்த களத்தில் நிற்கும் போர்வீரர்கள் நம் எதிராளியான சாத்தானின் தந்திரங்களை அறிந்து ஞானமும் அறிவுமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
Comments
Post a Comment