புதிய பட்ஜெட்
Laughing Therapy
😂😂😂
பட்ஜெட்டில் இதையும்
சேர்த்தா நல்லாருக்கும்:
50 புடவைக்கு மேல வச்சி இருந்தா 20% வரி !
அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவ தான் போகணும் அடிக்கடி போனா 10% வரி !
டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் !
பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ப்ளவுஸ் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் !
ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கணும் !
கட்டாத பட்டுபுடவைக்கு 50% வரி விதிப்பு .
இனி பட்டு புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம் !
அம்மா மாமியார் கூட போன்ல அஞ்சு நிமிஷம்தான் பேசணும் என்ன சமையல் என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய் பில்லில் சேர்க்க படும் !
10 மணிக்கு மேல புருஷன் வெளிய இருந்தால் எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது,மீறி செய்தால் போன் இணைப்பு துண்டிக்கப்படும் !
புருசனோட போன் பாஸ் வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை,அதுக்கு மேல கேட்டால் அவங்க அம்மா கூட போன்ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் !
கணவன் மனைவி இருவரும் துணி வைக்க ஒரே பீரோ தான் யூஸ் செய்யவேணும் தனி பீரோ யூஸ் செய்தால் 5% வரி உண்டு !
மாமியார் எம்புட்டு நச்சினாலும் அத புருஷன் கிட்ட குறையா சொல்லாமல் அவர்களே அதை சந்திக்க வேண்டும் !
சமையலில் தனிக்கவனம் செலுத்தவேண்டும் கண்டிப்பாக சாம்பாருக்கு ,ரசத்துக்கு வித்தியாசம் தெரிய வேண்டும் !
எக்ஸ்ட்ரா பணம் இருந்தால் சேமிக்க வேண்டும் உடனே பேன்சி வளையல் தொங்கட்டா வாங்க கூடாது !
புருஷன் வழி சொந்தங்கள் வந்தால் வீட்ல சமையலுக்கு சாமான் இல்லனு அடிக்கடி புருஷன கடைக்கு அனுப்ப கூடாது ,கடைக்கு போற வழில இது சொல்ல மறந்துட்டேனு அது வாங்கிட்டு வாங்கனு கடைக்கு போற வரை லிஸ்ட் சொல்ல கூடாது .
அக்கா, தங்கச்சிகளுக்கு உதவி பண்ணா அதெல்லா தேவை இல்லனு தடை போட கூடாது !
உப்புமா முற்றிலும் தடை செய்யப்படும் மீறி சமைத்தால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் !
மொத்தத்தில் இதை நடைமுறை படுத்தினால் சிறந்த பட்ஜெட்டாக இருக்கும்.
முகநூலில் ரசித்தது.
Comments
Post a Comment