நம் நாட்டில்தான் நடக்கிறது!
இந்த நாட்டில்தான் நடக்கிறது!
----------------------------------------------------
* 100 ரூபாய் லஞ்சம் வாங்கியவன்
கைதாகும்போது, முகத்தைப்
பொத்திக் கொண்டு செல்வதும்,
100 கோடி ஊழல் செய்தவன்
கைதாகும்போது, டாட்டா காட்டியபடி
சிரித்துக் கொண்டே செல்வதும்
இந்த நாட்டில்தான்...!
* சாதரணமாய் பிக்பாக்கெட்
அடித்தவனுக்கு சிறையில்
கொசுக்கடியுடன்,நாலைந்து பேர்
தங்கும் சுகாதாரமற்ற அறையில்
இடம் தருவதும்..,
கோடி கோடியாய் ஊழல் செய்த
வழக்கில் தண்டிக்கப்பட்டவனுக்கு,
டிவி வசதியுடன் சொகுசு
அறை தருவதும்
இந்த நாட்டில்தான்...!
*கஷ்டப்பட்டு பட்ட மேற்படிப்பு படித்தவன் வேலையில்லாமல் திண்டாடுவதும்,
5 ஆம் வகுப்புகூட படிக்காமல்,
சாராயம் விற்றவனெல்லாம்
கல்வி அமைச்சர் ஆகி, பல கல்லூரிகளை நடத்துவதும்
இந்த நாட்டில்தான்...!
*அரிசியை விளைவித்த விவசாயி,
அரிசிக்காக ரேசன் கடையில்
வரிசையில் நிற்பதும்,
ஆபாச வழக்கில் சிக்கிய
ஆசிரமச் சாமியாரிடம் ஆசி பெற,
வரிசை கட்டி நிற்பதும்
இந்த நாட்டில்தான்...!
* கோடிக்கணக்கில் வங்கிக் கடன்
வாங்கியவன், அதைக் கட்டாமல்,
வெளிநாட்டுக்குக் தப்பிச் செல்வதும்,
ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய
விவசாயி அதைக் கட்ட முடியாமல்,
விஷம் குடித்து சாவதும்
இந்த நாட்டில்தான்...!
* தண்ணீர் கேட்டு
போராடுபவர்கள் மீது
தடியடி நடத்துவதும்,
மதுவிலக்கை அமுல்படுத்த
அழுத்தம் கொடுத்தால்,
மதுக்கடைக்கு காவல்துறை
பாதுகாப்பளிப்பதும்
இந்த நாட்டில்தான்...!
*தேசப்பிதாவைக் கொன்றவனை
தேசத் தலைவனாகக் கொண்டாடுவதும்,
தேச நலனுக்காகப் போராடுபவன் மீது
தேசத் துரோக வழக்கு பாய்வதும்
இந்த நாட்டில்தான்...!
* ஜனநாயகம் என்ற பேரில்,
சர்வாதிகார ஆட்சி நடப்பதும்,
சாமானியர்களின் அரசு என்ற பேரில்,
சாமியார்களின் ஆட்சி நடப்பதும்
இந்த நாட்டில்தான்...!
தீருமா இந்த அவலநிலை
💭 WhatsApp...
Comments
Post a Comment