தேவனுடைய ஊழியன்

👨🏻‍⚖ *சபைகளில் ஆவிக்குரியக் கூட்டங்கள் மற்றும் சுவிசேஷக் கூட்டங்களில் பிரசங்கம்பண்ண  அழைக்கப்படுகிற கனத்திற்குரிய சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களுக்கான சில ஆலோசனைகள்!* 👨🏻‍⚖

🍇 எங்கிருந்து அழைப்பு வந்தாலும் *ஜெபித்து, தேவநடத்துதல் இருந்தால் மட்டும் ஒப்புக்கொள்ளுங்கள்.* இப்படி செய்வதால் *அழைக்கிறவர்களோடு ஏற்படும் சில கசப்பான அனுபவங்களுக்குத்* தப்பலாம்.
(கலாத்.6:6-11)

🍇 பெரிய சபை, அதிக காணிக்கை என்பதற்காக *தேவசித்தம் இல்லாவிட்டாலும் போவதும்,* சிறிய சபை, குறைந்த காணிக்கை என்பதற்காக *தேவநடத்துதல் இருந்தும் போகத் தயங்குவதும்* சரியல்ல.
(1தெசலோ.2:3-5)

🍇 *உங்கள் தேவைகள் சந்திக்கப்பட அல்ல. ஆத்துமாக்களின் தேவைகள் சந்திக்கப்படவே* நீங்கள் தேவனால் அனுப்பப்படுகிறீர்கள். *ஆகிலும் வேலையாட்களாகிய நீங்கள் கூலிக்கு பாத்திரவான்களாயிருக்கிறீர்கள்!*
(லூக்கா 10:7, 1தீமோத்.5:18)

🍇 "கூட்டத்திற்கு எத்தனைப்பேர் வருவார்கள்? ஔிஒலி அமைப்பு தரமாக இருக்குமா? எந்தமாதிரி இடத்தில் தங்கவைப்பீர்கள்? எந்தமாதிரி காரில்  அழைத்துக்கொண்டுப் போவீர்கள்? எவ்வளவு காணிக்கைத் தருவீர்கள்" என்று *அருவருப்பாக பேரம்பேசாதீர்கள்.*
(2பேதுரு 2:13-16)

🍇 *"பத்தாயிரம்பேர் மத்தியில் பேசுகிற நான், பத்துபேர் கூடுகிற சபைக்கு வரமுடியாது"* என்று முரண்டுபிடிக்காதீர்கள். *இயேசுவே இரண்டு மூன்றுபேர் கூடுகிற இடத்திற்கு வருகிறதை* மறந்துவிடாதீர்கள்.
(மத். 18:20)

🍇 "ப்பிளைட்டில் டிக்கெட் போட்டுக்கொடுங்கள். ட்ரெயினில் ப்பர்ஸ்ட் ஏ.சி.கோச்சில் புக்பண்ணிக்கொடுங்கள். வால்வோ பஸ்ஸின் டிக்கெட் போடுங்கள்" என்று *உங்கள் சுகபோகத்திற்காய், உங்களை அழைக்கிறவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள்.* (2தீமோத்.3:4)
அவர்களே ஏற்பாடு செய்வார்களானால் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

🍇 *நீண்ட தொலைவில் இருக்கும் எளிய சபைக்கு உங்கள் வசதிக்காக காரில் சென்று,* பெட்ரோல் செலவையோ, வாடகைக்காரானால் வாடகையையோ *அவர்களின் தலையில் கட்டி,* அவர்களுடய *கழுத்தை அறுக்காதீர்கள்.*
(1தெசலோ.2:9)

🍇 கூட்டத்திற்கு செல்வதற்குமுன்பு அழைக்கிற சபையாரின் ஒழுங்குமுறைகளை தெரிந்துகொள்ளுங்கள். *உங்களுக்கு புதிதாக இருந்தாலும் வேதத்திற்கு விரோதமாயிராத அவர்களுடைய ஒழுங்குமுறைகளை நீங்கள் கடைபிடிப்பது தவறில்லை.*
(1கொரிந்.10:33)

🍇 நன்கு *உபவாசித்து ஜெபித்து மிகுந்த பாரத்தோடும், ஆவியிலும் பலத்திலும் உறுதிபடுத்தப்பட்ட வசனத்தோடும்* செல்லுங்கள்.
(அப்போ..6:4, 1கொரி.2:5)

🍇 அழைக்கப்படுகிற இடத்தில் *தாழ்ந்திருக்கவும்,* வாழ்ந்திருக்கவும்;  திருப்தியாயிருக்கவும் *பட்டினியாயிருக்கவும்;* பரிபூரணமடையவும் *குறைவுபடவும்* ஆயத்தமாயிருங்கள்.
(பிலிப்.4:12) *"அதுவேண்டும் இதுவேண்டும்"* உங்கள் வசதிகேற்பக் கேட்டு, *அழைத்தவர்களை இம்சைப்படுத்தாதீர்கள்!*

🍇 *சினிமாக்காரர்களைப்போல* சிகையலங்காரம் செய்துகொண்டு, கவர்ச்சியும் அருவருப்பும்,  அலங்கோலமுமான ஆடையணிந்துகொண்டு தேவஜனங்களின் முன்பாக நிற்காதீர்கள். *நீங்கள் உலக ஆவி பிடித்தவன் இல்லை.* தேவனுடைய ஊழியக்காரன்.

🍇 சினிமா பாணியிலான பாடல், நடனம், இசை *இவைகளால் சபையை கறைப்படுத்திவிடாதீர்கள்.* நீங்கள் ஜனங்களை பரவசப்படுத்தும் சினிமாக்காரன் இல்லை. *பக்திவிருத்தியை உண்டாக்கும் ஊழியக்காரன்!*
(எபேசி.4:12)

🍇 *எளிமையான மக்களின் மத்தியில் எளிமையான உடையுடுத்தி, எளிமையாகவும், தாழ்மையாகவும், அன்பாகவும்* நடந்துகொள்ளுங்கள். *ஒருவேளை உங்களை அழைத்திருக்கிற சபையார் ஆடம்பரப் பிரியரும், பந்தா பேர்வழிகளாயிருந்தாலும்* நீங்கள் அவர்களுக்கு *நல்ல மாதிரியை* காண்பிக்கலாமே!
(மத்.5:3, 1தீமோத்.4:12)

🍇 பிரசங்கப் பீடத்தை *உங்களையும், உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியத்தையும் பிரபலப்படுத்த* துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.
(2கொரிந்.4:5)

🍇 உங்கள் புத்தகங்களையும், ஔிஒலி நாடாக்களையும் *விற்பதிலும்,* உங்கள் ஊழியத்திறகு ஆதரவாளர்களைப் *பிடிப்பதிலும்*
பிரசங்க நேரத்தை விழுங்கிவிடாதீர்கள்.
(பிலிப்.2:21)

🍇 பிரசங்கப்பீடத்தில் நீங்கள் *வானத்திலிருந்து குதித்துவந்தவர்களைப்போலவும், உங்களை அழைத்திருக்கிற ஊழியரைவிட விசேஷித்த வல்லமைப் பெற்றவர்களைப்போலவும்* நடிக்காதீர்கள்.
(2தீமோத்.3:2)

🍇 *ஜனங்கள் மத்தியில் உங்களை விசேஷமானவர்களாய் காண்பிக்க* பொய் சொப்பனங்களையும், தீர்க்கதரிசனங்களையும் அள்ளிவிட்டு, *கூட்டத்தில் இல்லாதவர்களையெல்லாம் பேர்சொல்லி* கூப்பிட்டுக்கொண்டிருக்காதீர்கள்.
(யூதா 1:8-10)

🍇 *தேவனையும் அவருடைய வார்த்தையையும் பிரஸ்தாபப்படுத்தவே* நீங்கள் ஜனங்களின் முன்பாக நிற்கிறீர்கள். எனவே, *உங்களை மறைத்து தேவனையும் அவருடைய வார்த்தையையும் வெளிப்படுத்துங்கள்.* (யோவான் 3:30, கலாத்.2:20)

🍇 தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், *துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில்* பேசுங்கள்.
(2கொரிந்.2:17) 

🍇 *உங்கள் துராசையையும்,* *பொருளாசையையும் வெளிப்படுத்தும் இடமாக* பிரசங்கப்பீடத்தை பயன்படுத்தாமலும், *மனுஷருக்குப் பிரியமுண்டாகப் பேசாமலும் இருந்து,*
சுவிசேஷத்தை உங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் உங்களை உத்தமரென்றெண்ணினபடியே,  *உங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுங்கள்.*
(1தெசலோ. 2:3-5)

🍇 வேறொரு கொள்கையை பின்பற்றும் சபைக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருந்தால் *உங்கள் சபைப்பிரிவின் கொள்கையை பிரசங்கத்தில் திணிக்காமல்,* சத்தியத்தை மட்டுமே பேசுங்கள்.
(தீத்து 2:1,8)

🍇 உங்கள் ஊழியத்தின் முடிவில்: ஜனங்கள் *இனிக் குழந்தைகளாயிராமல்,* மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான *தந்திரமுமுள்ள போதகமாகிய* பலவித காற்றினாலே அலைகளைப்போல *அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும்,  வளருகிறவர்களாயிருக்கும்படியாக* தங்களை ஒப்புக்கொடுத்திருக்கவேண்டியது அவசியம்!
(எபேசி.4:1415)

🍇 பிரசங்கத்தில் *உங்களை அழைத்திருக்கிற ஊழியரையும், அவருடைய ஊழியத்தையும் ஜனங்கள் புரிந்துகொள்ளும் வகையில் தாக்கி  பிரசங்கியாதபடிக்கு* கவனமாக இருங்கள். அது சபையில் இடறலை உண்டாக்கிவிடும்!
(1கொரிந்.10:33)

🍇 உங்களை அழைத்திருக்கிற ஊழியரின் ஊழிய வளர்ச்சிக்கு தடையாகவும், சபையாருக்கு இடறலாகவும் *அவரிடம் தகாத காரியத்தை எதையாகிலும் கண்டால், அவரிடம் தனிமையில் அன்புடனும், மரியாதையுடனும்* எடுத்துச் சொல்லுங்கள். *தெய்வபயமுள்ள ஊழியர் கேட்டுக்கொள்வார்.* (கலாத்.6:1)

🍇 *நல்ல சாட்சியும், சத்தியமும், அனுபவமும் உள்ள மூத்த ஊழியர் நடத்தும் சபைக்கு* ஊழிஞ்செய்ய செனறிருந்தால், *அவரிடம் அநேகக் காரியங்களை கற்றுக்கொண்டு* வாருங்கள்!

🍇 விசுவாசிகளைக்குறித்து ஊழியக்காரர் சொன்ன குறைகளையும், ஊழியக்காரரைக்குறித்து விசுவாசிகளிடம் கேள்விப்பட்ட குறைகளையும் மனதில் வைத்துக்கொண்டு, *ஆவியினால் ஏவப்படாமல் மாம்சீக வைராக்கியத்தில் அடித்து நொறுக்கிவிடாதீர்கள். சபையில் அது ஏற்படுத்தும் சேதம் அதிகமாயிருக்கும்!* சபையை பாழாக்க அல்ல, *பண்படுத்தவே நீங்கள் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்!*
(2கொரிந்.10:8, 13:10)

🍇 உங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள, *நீங்கள் ஜெபிக்கும்போது பேய்கள் ஆடும், ஓடும் காட்சிகளை படம்பிடிக்கும் அருவருப்பான காரியத்தை* செய்யாதீர்கள்.
(லூக்கா 10:17,20)

🍇 *விசுவாசிகளுக்காய் ஜெபிக்கும்படி உங்களை அழைத்த ஊழியர் கேட்டுக்கொள்ளும்வரை பொறுமைகாருங்கள்.* கேட்டுக்கொள்ளாவிட்டால் வருத்தப்படாமல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். *நாம் அப்பிரயோஜனமான  ஊழியராயிருக்கிறபடியினால்* அதை கௌரவ குறைவாக எண்ணவேண்டியதில்லை. (லூக்கா 17:10)

🍇 *உங்களிடம் ஜெபித்துக்கொள்ளும் விசுவாசிகள் உங்களுக்குக் கொடு்க்கும் காணிக்கைகளைக்குறித்து சபையின் போதகருக்கு கணக்குக் கொடுக்கவேண்டும் என்கிற வேதசட்டம் இல்லாவிடினும்,* அதை அவருக்கு தெரியப்படுத்தவும், கூடுமானால் அவரிடம் கொடுத்துவிடவும் செய்யலாம். *இப்படிச் செய்கிறதினால் உங்களைகுறித்து ஊழியருக்கு தவறான எண்ணம் உண்டாவதை* தவிர்க்கலாம்.
*தங்களுக்காய் ஜெபிக்கிற ஒரு தேவஊழியனுக்கு ஜனங்கள் காணிக்கைக் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது* என்று எண்ணுகிற தயாள சிந்தையுள்ள சில ஊழியர்கள் *அதை தவறாக எடுத்துக்கொள்ளாததோடு, பிரசங்கியார் காணிக்கையை தங்களிடம் கொடுத்தாலும் வங்க மறுப்பதும் உண்டு!* (மத்.20:15)

🍇 விசுவாசிகள் எவராகிலும் *உங்களை தங்கள் வீட்டுக்கு ஜெபிக்க வரும்படி* அழைத்தால், *அவர்களுடைய ஊழியரிடம் அதைத் தெரியப்படுத்தும்படி கூறுங்கள்.* ஊழியக்காரரோடு சென்று ஜெபித்துவருவதுதான் ஏற்றது. *உங்களை அழைத்த ஊழியரோடு உங்கள் சிநேகம் நிலைக்க* இப்படி செய்கிறது நல்லது. (எபிரே.13:1)

🍇 விசுவாசிகளில் எவராகிலும் உங்களிடம் அலைபேசி எண்ணைக் கேட்டால், *"உங்கள் ஊழியரிடம் இருக்கிறது பெற்றுக்கொள்ளுங்கள் "* என்று அன்பாய் சொல்லிவிடுங்கள்.
*விசுவாசிகளின் ஐயக்கியத்தைவிட உங்களுக்கு ஊழியரின் ஐக்கியமே முக்கியம்!*
(2கொரிந்.2:18)

🍇 கூட்டத்தின் முடிவில்  எளிய சபையாரிடம் *"இவ்வளவு காணிக்கை கொடுத்தே ஆகவேண்டும்"* என்று நிற்காதீர்கள். *உண்மையிலேயேகஷ்டப்படுகிற ஊழியராக இருந்தால், உங்களால் இயன்ற உதவியை* செய்துவிட்டு வருங்கள்.
(2கொரிந்.12:15)

🍇 உங்களை அழைத்த ஊழியர் *வசதியானவராயிருந்தும் பிசிணித்தனமாய் கொடுத்த* காணிக்கையைக்குறித்து கவலைப்படாதீர்கள். *"இனி இவர் அழைத்தால் வரவேக்கூடாது"* என்று முடிவுசெய்துவிடாதீர்கள். *அவர் அளக்கிற அளவின்படியே கர்த்தர் அவருக்கும்* அளப்பார். ஆனால் *உங்கள் வேலைக்கான கூலியை தேவன் எவரைக்கொண்டாகிலும்  உங்களுக்கு நிச்சயம் கொடுப்பார்!*
(பிலிப்.4:10,16-18)

🍇 விசுவாசியின் வீட்டில் நீங்கள் தங்கவைக்கப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் ஸ்தலத்திற்கு திரும்பியப்பின்பு, *நீங்கள் சுகமாய் வந்து சேர்ந்ததை அவர்களுக்கு தெரிவிப்பதோடு, நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.* அதற்குப்பின்பு *அவர்களை தொடர்புகொள்வதைத் தவிர்த்து, அவர்களுக்காக தொடர்ந்து ஜெபியுங்கள்.*
(கொலோ.3:15)

🍇 உங்கள் ஊழியத்தின்மூலம் உண்டான *எல்லா கனத்தையும் மகிமையையும் உங்களை அழைத்த, பயன்படுத்தின தேவனுக்கே* செலுத்துங்கள்!
(1பேதுரு 4:11)

🍇 பின்பு எப்போதாவது நீங்கள் ஊழியஞ்செய்ய சென்ற ஊரின் வழியே  செல்லநேர்ந்தால், *விசுவாசியின் வீட்டில் தங்காமல், உங்களை அழைத்திருந்த ஊழியரின் வீட்டில்* தங்கி இளைப்பாறி செல்லலாம். *ஊழியக்காரருக்குத் தெரியாமல் விசுவாசியின் வீட்டிற்குச் செல்லுகிறது* முறையல்ல.
(அப்.21:8-10)

🤝🏻 ஆரோக்கியமான ஊழியத்தை செய்ய ஆசிக்கிற உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக!!

- *தேவனுடைய ஊழியன்....*

க. காட்சன் வின்சென்ட்.
[மகிமையின் ஊழியம்]
9488069317

As received from WhatsApp

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*