Posts

Showing posts from February, 2020

அன்பு_உலகைஆளும்

#அன்பு_உலகைஆளும் கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி... உள்ளே ஓர் எறும்பு கிடந்தது. அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு? சண்டை ... சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது. *༺🌷༻* இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது. அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான். "உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான். உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார். இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே." மனைவி சிரித்தாள். தன் தவறை உணர்ந்தாள். அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள். அதனால் காபியில் எறும்பு சாகவில்லை. அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை ..... *༺🌷༻* வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது. *༺🌷༻* நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்... நாம் தவறே செய்யமாட்டோம் எனவும் நாம் நினைக்கக் கூடாது... தவறுகளை நகைச்சுவை...

தவக்காலத்தில் நான் எதைக் கைவிடவேண்டும்?

இந்தத் தவக்காலத்தில் நான் எதைக் கைவிடவேண்டும்?   அசைவம்? சாக்லேட்? ஐஸ்கிரீம்?  குளிர்பானங்கள்? பொதுவாக தவக்காலத்தில் நம்மில் பலரும் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று கருதி, நமக்கு மிகவும் பிடித்ததைக் கைவிட நினைப்பதுண்டு.  நிச்சயமாக இது பெரிய காரியம்!  தவக்காலத்தில் உபவாசம் இருப்பதென்பது மிகவும் சிறந்தது.  எனினும், இந்த வருடம் நாம் கைவிடக்கூடிய மற்ற காரியங்களையும் பார்ப்போம். 1.  குறை கூறுவதை விட்டுவிட்டு, நன்றி சொல்வதில் கவனம் செலுத்துவோம். “எல்லாவற்றையும் குற்றம் காணாமலும், வாதிக்காமலும் செய்யுங்கள்.  அப்போது குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்றபிள்ளைகளுமாயிருபீர்கள்..... (பிலிப்.2:14-15). “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெச.5:18). 2.  காழ்ப்புணர்வை விட்டுவிட்டு, மன்னிக்கும்படி மனந்திரும்புவோம். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.  (எபே.4:31). ஒரு...

பாஸ்டர்

*பாஸ்டர் சிரித்தால்...* இவருக்கு பக்தியே இல்லை என்பர் *பாஸ்டர் அழுதால்...* இவருக்கு விசுவாசமே இல்லை என்பர் *பாஸ்டர் சாப்பிட்டால்...* இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பர் *பாஸ்டர் உபவாசித்தால்...* இவர் செய்வது வேதத்தின் படி தவறு என்பர் *பாஸ்டர் வெள்ளை துணி உடுத்தினால்..* இவர் நடிக்கிறார் என்பர் *பாஸ்டர் கலர் துணி உடுத்தினால்...* இவரெல்லாம் ஒரு ஊழியரா? என்பர் *பாஸ்டர் டை கட்டினால்...* இவருக்கு தலக்கனம் அதிகம் என்பர் *பாஸ்டர் மனந்திறந்து பேசினால்...* இவர் ஒரு எமோஷன் பார்ட்டி என்பர் *பாஸ்டர் அமைதியாய் இருந்தால்...* இவர் பெருமைக்காரர் என்பர் *பாஸ்டர் இயேசுவை பற்றியே பேசினால்...* இவர் பூமியில் வாழ தகுதியில்லாதவர் என்பர் *பாஸ்டர் சத்தமாய் பேசினால்...* இவர் மாம்சத்தில் பேசுகிறார் என்பர் *பாஸ்டர் அமைதியாய் பேசினால்...* இவர் ஒரு வல்மையற்ற ஆளு என்பர் *பாஸ்டர் பாவத்தை கண்டித்தால்...* இவர் பெரிய பரிசுத்தவானோ!? என்பர் *பாஸ்டர் ஆசீர்வாதத்தை பற்றி பேசினால்...* இவர் ஒரு பின்மாற்றக்காரர் என்பர் *பாஸ்டர் குடும்ப ஒழுங்கை பற்றி பேசினால்...* இதெல்லாம் சபையில் பேசக்கூடாது என்பர் *பாஸ்டர் கொடுத்தல் பற்றி பேசினா...

பர்த்தலோமேயு சீகன்பால்

பர்த்தலோமேயு சீகன்பால் என்ற பெயரை அறியாத கிறிஸ்தவர்களே இருக்க முடியாது இவர்தான் #இந்தியாவின்_முதல்_புத்தகத்தை_அச்சடித்து_வெளியிட்ட இலக்கிய மேதை. ஜெர்மன் தேசத்தை சார்ந்த இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தரங்கம்பாடி என்ற இடத்தில் மிஷனரி பணியாற்றினார். அப்போது இங்கிலாந்து தேசத்திலிருந்து அச்சுஇயந்திரத்தை கொண்டுவந்து நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் காகிததொழிற்சாலையை உருவாக்கி இந்தியாவின் முதல்புத்தகமாக தமிழ்மொழியில் புத்தகத்தை வெளியிட்டார்.#இவரது_அச்சுகூடம்தான்_இந்தியாவின்_முதல்_அச்சுக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இவரை கவுரவிக்கும் வகையில் (கலைஞர் ஆட்சியின்போது)இவரது தபால்தலையும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #அந்த_புத்தகம்தான்_பரிசுத்த_வேதாகமம்(பைபிள்) என்பது இந்தியாவில் எத்தனைபேருக்கு தெரியும். இவர் தமிழர்களுக்கென்று இன்னும் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். #சீகன்பாலுக்காக_ஆண்டவரை_ஸ்தோத்தரிப்போம்.

கிறிஸ்தவர்களுக்கு 12 ஒழுங்குகள்

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜாண் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள் 1. ஊக்கமும் சுறுசுறுப்பும்    உள்ளவனாயிரு. ஒருபோதும் சும்மாயிராதே. உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டிருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தைச் செலவிடாதே.. 2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு. "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பதே உன் வாழ்வின் சட்ட வாக்கியமாய் இருக்கட்டும். எல்லா வெதுவெதுப்பையும், கேலி பேசுதலையும், முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று.. 3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும், குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம் பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில் மிகவும் ஞானத்தோடு நடந்து கொள். 4. கிறிஸ்துவுக்குள் உன்னை விட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே. 5. உன் சொந்தக் கண்கள் காணாதிருக்க, யாரைக் குறித்தும் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே. எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்து சோதித்துப் ப...

1990 க்கு முன் பிறந்தவர்கள்

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!! 1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.    ♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…    ♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.    ♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.    ♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…    ♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…    ♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…    ♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…    ♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்… ...