Posts

நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு

*நாம் பெற்ற மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா?* *நாம் பெற்றிருக்கிற பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? நிபந்தனையற்றதா?*  ஆண்டவராகிய இயேசு நமக்காய் சிந்தின இரத்தத்தினாலே நமக்கு பாவ மன்னிப்பை அருளி நம்மை இரட்சிக்கிறார். *“குமாரனாகிய அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது”* (கொலோ 1:14). *“அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது”* (எபே. 1:7).   இந்த பாவமன்னிப்பு அவருடைய இரத்தத்தினாலே உண்டாகின்றபடியினாலே, அந்த பாவ மன்னிப்பிற்காக நாம் செய்ய வேண்டிய பிராயசித்தம் ஒன்றுமில்லை. *இலவசமாய் கிருபையாலே, அவரிடத்தில் வருகிற ஒவ்வொருவருக்கும் பாவமன்னிப்பை கொடுத்து இரட்சிப்பை அருளுகிறார்.*  _*ஆனாலும் இந்த பாவ மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதே!*_ மத்தேயு 18ம் அதிகாரத்தில் இதை விளக்கும்படி இயேசு ஒரு உவமையை கூறியுள்ளார். இந்த உவமையை நம்முடைய நடைமுறையில் சற்று விளக்கமாக பார்ப்போம். ஒரு பெரிய ராஜாவிடம், *பீட்டர் என்பவன் 10000 தாலந்து கடன்பட்டுள்ளான்.*  ஒரு தாலந்து என்பது...

தமாஷ்

JUST a JEST மாலை நேர  தமாஷ்.   🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!  🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ........................................................................ ☑படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? 🔗புக்கை மூடிடுவேன்! ........................................................................ 🔘காலில் என்ன காயம்? 🔗செருப்பு கடித்து விட்டது 🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா! .............................................................. ☑குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்? 🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே! ....................................................................... 🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..? 🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்! ........................................................................... ☑டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு 🔗என்னிடம் சுத்தமா இல்ல 🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்! ......

கார் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

மகிழுந்து வைத்திருப்பது இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு பெருமைக்குரிய விசயம். அதற்கு பூ வைப்பது, சாமி படம் மாட்டி கோவில் ஆக்குவது, டயரில் எலுமிச்சம் பழம் வைத்து நசுக்கி காத்து கருப்பு விரட்டுவது, விசிட்டிங் கார்டை அப்படியே கண்ணாடியில் ஸ்டிக்கராக ஒட்டுவது, சாலையைப் பாத்தா சமத்து சேலையைப் பாத்தா விபத்து என்று சமுதாயத்துக்குக் கருத்து சொல்வது என நம் மக்கள் செய்யும் அட்டகாசங்களை ஏகப்பட்டது எழுதலாம்.  கார் வாங்கும்போதே பாதுகாப்பு அம்சங்களுக்கு பெரும்பாலானோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தகர டப்பாவை கார் என்று நினைத்து வாங்கும் வாடிக்கையாளர், தயாரித்து விற்கும் கம்பெனிகள், அதை அனுமதிக்கும் அரசாங்கம் என மூன்று பேருக்கும் இதில் முறையே 33% பொறுப்பு உண்டு.  கார் வாங்கியாயிற்று, ஓட்டுநர் உரிமம் இருக்கிறது, சாலைப் பாதுகாப்பு விவரங்கள் அனைத்தும் தெரியும், வண்டியும் பணிமனையில் விட்டு முறையாகப் பழுது பார்க்கப்படுகிறது என்றாலும் சில கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொண்டு தயாராக இருப்பது நமது பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதோடு தேவையற்ற சங்கடங்களையும் தவிர்க்க உதவும். அவை சில நேரங்களில் நமக்குப் பயன...

Shortcut Keys Computer

Shortcut Keys System!!  CTRL+A. . . . . . . . . . . . . . . . . Select All CTRL+C. . . . . . . . . . . . . . . . . Copy CTRL+X. . . . . . . . . . . . . . . . . Cut CTRL+V. . . . . . . . . . . . . . . . . Paste CTRL+Z. . . . . . . . . . . . . . . . . Undo CTRL+B. . . . . . . . . . . . . . . . . Bold CTRL+U. . . . . . . . . . . . . . . . . Underline CTRL+I . . . . . . . . . . . . . . . . . Italic F1 . . . . . . . . . . . . . . . . . . . . . . Help F2 . . . . . . . . . . . . . . . . . . . . . Rename selected object F3 . . . . . . . . . . . . . . . . . . . . . Find all files F4 . . . . . . . . . . . . . . . . . . . . . Opens file list drop-down in dialogs F5 . . . . . . . . . . . . . . . . . . . . . Refresh current window F6 . . . . . . . . . . . . . . . . . . . . . Shifts focus in Windows Explorer F10 . . . . . . . . . . . . . . . . . . . . Activates menu bar options ALT+TAB . . . . . . . . . . . . . . . . Cycles between open applications ALT+F4 . . . . . . . . . . . . . . . . . Quit ...

எது_எதனால்_கெடும்

01) பாராத பயிரும் கெடும். 02) பாசத்தினால் பிள்ளை கெடும். 03) கேளாத கடனும் கெடும். 04) கேட்கும்போது உறவு கெடும். 05) தேடாத செல்வம் கெடும். 06) தெவிட்டினால் விருந்து கெடும். 07) ஓதாத கல்வி கெடும். 08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். 09) சேராத உறவும் கெடும். 10) சிற்றின்பன் பெயரும் கெடும். 11) நாடாத நட்பும் கெடும். 12) நயமில்லா சொல்லும் கெடும். 13) கண்டிக்காத பிள்ளை கெடும். 14) கடன்பட்டால் வாழ்வு கெடும். 15) பிரிவால் இன்பம் கெடும். 16) பணத்தால் அமைதி கெடும். 17) சினமிகுந்தால் அறமும் கெடும். 18) சிந்திக்காத செயலும் கெடும். 19) சோம்பினால் வளர்ச்சி கெடும். 20) சுயமில்லா வேலை கெடும். 21) மோகித்தால் முறைமை கெடும். 22) முறையற்ற உறவும் கெடும். 23) அச்சத்தால் வீரம் கெடும். 24) அறியாமையால் முடிவு கெடும். 25) உழுவாத நிலமும் கெடும். 26)உழைக்காத உடலும் கெடும். 27) இறைக்காத கிணறும் கெடும். 28) இயற்கையை அழிக்கும் நாடும் கெடும். 29) இல்லாலில்லா வம்சம் கெடும். 30) இரக்கமில்லா மனிதம் கெடும். 31) தோகையினால் துறவு கெடும். 32) துணையில்லா வாழ்வு கெடும். 33) ஓய்வில்லா முதுமை கெடும். 34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடு...

சுய ஒழுக்கம்

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது  1. *தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள்*. அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம். 2. *திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள்*. இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும். 3. *Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள்.* அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம். 4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம். *இன்னும் கல்யாணம் ஆகலயா?* *குழந்தைகள் இல்லையா?* *இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?* *ஏன் இன்னும் Car வாங்கவில்லை?* இது நமது பிரச்சினை இல்லைதானே!" 5. *தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது* அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர...

போட்டிகள் வேண்டாமே

*தேவை அற்ற போட்டிகள் உங்களை திசை திருப்பிவிடும்!*  ஒரு நாள் வழக்கம் போல நான் ஜாகிங் செய்து கொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது. சட்டென்று மனதில் ஒரு எண்ணம். அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன். மெதுவாய்  அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன என் வேகத்தை சட்டென்று கூட்டினேன். இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்! ‘அப்பாடி, முந்தி விட்டேன்!’ பின்னால் திரும்பிப் பார்த்தேன் அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார் அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே த...