விவசாயி போராட்டம்
காவலர் தன் வீட்டுக்கு போனதும்
அவர் மனைவி கேட்கிறாள்,என்னங்க இவ்வளவு சோர்வாக வாரிங்க....
இன்றைக்கு எங்கே பணி ...?
அதுவா இந்த விவசாயி நாயிங்க போராட்டம் செய்தானுங்க அத அடிச்சி விரட்டி விட்டு வாரேன்,
அப்படியா சரிங்க,
காவலர் , சரி ரொம்போ பசிக்குது சோறுப்போடு,
மனைவி கேட்கிறாள் என்ன கேட்டிங்க...?
சோறுப் போட சொன்னேன்,
மனைவி சிரித்த படி சொல்கிறாள்
விவசாயிகளை அடித்து விரட்டி விட்டு
வீட்டிலே சோறு கேட்குறிங்க ...!
நீங்க வாங்கின மாத சம்பளம் அங்கதான் இருக்கிறது அதிலே ஒரு ஆயிரம் ரூபாய் எடுத்து சாப்பிடுங்க பசி அடங்கிடும்...,என்கிறாள்,
அதைக் கேட்ட காவலர் முகத்தில் அத்தனை விவசாயிகளும் காரித்துப்பினது போன்று உணர்கிறான்,
மேலும் அவன் மனைவி சொல்கிறாள் காசு கொடுத்தால் எல்லாம் கிடைத்து விடும் என்கிற திமிரில் தானே எல்லாம் செய்றிங்க ...? எவ்வளவு காலத்துக்கு இப்படி ஆடுவிங்க ...!?
பணத்தை மெஷினில அச்சடித்து விடலாம் ஆனால் அரிசிய மண்ணுலதான் எடுக்கனும் அதுக்கு விவசாயி வேணும் விவசாயம் வேணும், இப்படி உரிமைக்காக போராடுர விவசாயி எல்லாத்தையும் அடிச்சி அடக்கிட்டா நாளைக்கு பிச்சை எடுத்தா காசுக் கிடைக்கும் ஆனால் சோறுக் கிடைக்காது என்று அவள் சொல்லி முடிக்க அந்த காவலர் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு வெளியே போய் விடுகிறார் ...!
- நிலா பிரியன்
💭 whatsapp...
Comments
Post a Comment