ஜாண் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள்.

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜாண் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள்.

என் இலங்கை நண்பர் ஒருவர்  அனுப்பி வைத்த ஒரு பயனுள்ள பதிவு.

பலருக்கும் அனுப்பி வையுங்கள்.

_______________________

1. ஊக்கமும் சுறுசுறுப்பும்    உள்ளவனாயிரு. ஒருபோதும் சும்மாயிராதே. உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டிருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தைச் செலவிடாதே..

2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு.
"கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பதே உன் வாழ்வின் சட்ட வாக்கியமாய் இருக்கட்டும். எல்லா வெதுவெதுப்பையும்,
கேலி பேசுதலையும்,
முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று..

3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும், குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம் பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில் மிகவும் ஞானத்தோடு நடந்து கொள்.

4. கிறிஸ்துவுக்குள் உன்னை விட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே.

5. உன் சொந்தக் கண்கள் காணாதிருக்க, யாரைக்
குறித்தும் பேசப்படும் தீமையானவற்றை ஒருபோதும் நம்பாதே. எல்லாவற்றையும் அடிப்படையிலிருந்து சோதித்துப் பார்.

6. எந்த மனிதனைக் குறித்தும் தீமையானதைப் பேசாதிரு. உன் வார்த்தைகள் கேன்சரைப் போல அரித்துப்போடும் என்பதை நினைவில் வைத்துக் கொள். சம்பந்தப்பட்ட நபரைச் சந்திக்கும்வரை உன் எண்ணங்களை உனக்குள்ளாகவே அடக்கி வைத்துக்கொள்.

7. யாரிடமாவது தவறைக் கண்டால் உடனடியாக நேருக்கு நேர் சுட்டிக்காட்டு. உன் மனதிலிருந்து பகை என்னும் நெருப்பை மிகச்சீக்கிரம் எடுத்துப் போடு.

8. பாவத்தைத் தவிர வேறு எதற்கும் வெட்கப்படாதே.

9. அழியும் ஆத்துமாக்களைக் காப்பதே உன் தலையான கடமை, எனவே இதற்காக நீ செலவு செய்வதுடன் செலவு செய்யப்படவும் ஆயத்தமாயிரு.

10. எல்லாவற்றையும் குறிப்பிட்ட நேரத்தில் செய். எல்லாவற்றிலும் ஒழுங்கைக் கடைப்பிடி. அவைகளைத் தேவ கோபாக்கினைக்கும் சபையின் கட்டுப்பாட்டுக்கும் பயந்து அல்ல,
மனசாட்சியினிமித்தம் பற்றிக்கொள்.

11. எல்லாக் காரியத்தையும் தேவ சித்தத்தின்படி செய்.

12. கவனி! பல தடவைகள் பிரசங்கிப்பது மட்டும் உன் கடமையல்ல, எத்தனை ஆத்துமாக்களை மீட்க முடியுமோ அத்தனைபேரையும் மீட்டு அவர்களை மனந்திரும்புதலுக்கு நேராக வழிநடத்தி, உன் முழு பெலத்தோடும் அவர்களைப் பரிசுத்தத்தில் ஊன்றக்கட்டு; ஏனெனில் பரிசுத்தமில்லாமல் ஒருவனும் தேவனைத் தரிசிக்க முடியாதே!

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*