பாஸ்டர்
*ஒரு ஊழியக்காரர் தேவ பிரசன்னத்திலும் தேவனோடு ஐக்கியத்திலும் உறுதியாக இருக்கிறார் என்பதை கண்டு கொள்ளும் வழிமுறைகள்* 1.அன்பாக இருப்பார். 2.நிதானமாக பேசுவார். 3.எரிச்சல் அடையமாட்டார். 4.குறை பேசமாட்டார். 5.ஸ்தோத்திரம் செய்து கொண்டு இருப்பார். 6.எப்போதும் ஆத்துமாக்களை பற்றியும் சபை வளர்ச்சி பற்றியும் பேசுவார் 7.ஜெபத்திலேயே இருக்கிறது போல நடிக்கமாட்டார். 8.தன்னை பற்றி மேன்மையாக பேச மாட்டார். 9.பண ஆசை, பொருளாசை இருக்காது. 10.மற்றவர்களின் குறைகளை மூடுவார். 11.சத்தியத்திற்காக நிற்பார். 12.தீர்மானங்களில் பதற்றம் அடைய மாட்டார். 13.மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கமாட்டார். 14.எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் கர்த்தர் பார்த்துக்கொள்வார் என்று விசுவாசமாக இருப்பார். 15.சுய பரிதாபத்தை சம்பாதிக்கமாட்டார். 16.கொடுக்கிற தயாளனாக இருப்பார். 17.யாரையும் சபிக்க மாட்டார். 18.ஆவியானவருக்கும் அவர் வழிநடத்துதலுக்கும் முதலிடம் கொடுப்பார். 19.மற்றவர் கேடுக்கு காரணமாக இருக்கமாட்டார். 20.ஊழியங்களை தவிர மற்ற அலுவல்களில் சிக்கி கொள்ளமாட்டார். *தேவனே எனக்கு கிருபை தாரும்*