நகைச்சுவை
👩🏻👩🏻👩🏻👩🏻🍳 உலகத்தையே ஒரு கலக்கு கலக்கனும்னு ஆசை
but
அவ்வளவு பெரிய கரண்டி தான் எங்க இருக்கூனு தெரியல்ல
😜😜😜😜😜😜😋😋
🕺🏻 ''டேய்..ஓடாதே..
நில்ரா..
எதுக்குடா
இவளை தூக்கிட்டு ஓடறே ?''
''நீங்கதானே சார் சொன்னீங்க.
விளையாட்டு விழா ஆரம்பிக்கறதுக்கு முன்னால , ஜோதியைத் தூக்கிட்டு ஓடணும்னு '' 🏃🏻
🤔 "(என்ன இவ! இன்னக்கி இட்லில இவ்ளோ ஓட்ட போட்டு வச்சுருக்கா😐)"
"என்னங்க இடியாப்பம் எப்டி இருக்கு"
"(ஆத்தி இடியாப்பமா இது😳😭) சூப்பர் செல்லம்👌😀"
👻 ஜோதிடர் : உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால் உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" - அதை வச்சதே என் மனைவி தான்.
👩🏻👩🏻👩🏻👩🏻💻 *மதிப்பெண் என்று பெயர் வைப்பதால்தான் பெண்கள் முதலிடத்தில்* *வருகிறார்கள்...*
*இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள் மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..*
😜😜😜😜
😲 கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
மனைவி : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.
கணவன் : "ஏன்?... என்னாச்சு"..?..
மனைவி : "இன்றைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,...நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"! ...
கணவன் : "சரி"...!
மனைவி : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது..!
அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி"!.
கணவன் : "(கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே"!.
மனைவி : " மன்னிக்கிறதா?..
அந்த பேச்சுக்கே இடமில்ல.
எங்க அந்த உருட்டு கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)
(வாசலிலிருந்து வந்த மகன்...)
மகன் : " யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா"!..
அப்பா : "ஏண்டா"..?
மகன் : "நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா"!!
அப்பா : "அடப்பாவி மகனே!
வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ...
இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..!
😁😁😁😁😁
🤣 சிரிக்க மட்டுமே!
வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகும்!
*************
மனைவி:
ஏங்க! உங்களைக்
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு
என் புத்தியை
செருப்பாலத்தான்
அடிச்சுக்கோணும்.....!
கணவன்:
செருப்பு இந்தா இருக்கு.....!
புத்திக்கு எங்கே போவ!!??
*************
கணவன்:
"என்ன சமைச்சிருக்கே ...?
சாணி வரட்டி மாதிரி இருக்கு...
நல்லாவேயில்லை"......
மனைவி:
"கடவுளே! .....
இந்த மனுஷன்
இன்னும் என்னவெல்லாம்
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....?
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !
*************
😳😳🙄
*"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க....*
*அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"*
*"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க...*
*அப்போ இந்தச் சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"*
😒😒😏
😱 மனைவி : என்னங்க பக்கத்து வீட்டில பெரிய சண்டை நடக்குது. போய் ஒரு தடவை என்னன்னு பார்த்துட்டு வாங்களேன்.
😜 கணவன் : ஏற்கனவே ஒரு தடவை போனதுக்குத்தான் சண்டையே நடக்குது 😍 😜
Comments
Post a Comment