இந்தியா- லஞ்சம் - சிந்திக்க
இந்தியா பரிசோதனைக்காக விண்வெளிக்கு ராக்கெட் அனுப்ப தீர்மானித்தது. கூட ஒரு மனிதனையும்....
போகும் மனிதன் திரும்பி வருவான் என எந்தவித நம்பிக்கையும் இல்லாததால் நஷ்டபரிகாரம் தருவதாக முன்னதாகவே தீர்மானம் செய்யப்பட்டது .
பலியாடு யாரென்று தீர்மானிக்கின்ற இன்டர்வியூவில் முதலில் வந்தது ஒரு சர்தார்ஜி.
இரண்டு லட்சம் ரூபா தன் குடும்பத்திற்கு தந்தால் தான் போகத்தயாரென்று கூறினார்.
ஆனால் அதற்கடுத்து வந்த ஹிந்திக்காரன் சொன்னான் தனக்கு ஒரு லட்சம் தந்தா தான் போவதாக.
அடுத்த ஆளாக வந்தது ஒரு தமிழன்.
காசு கொடுத்தா எந்த நரகத்துக்கும் போகத்தயாரா இருப்பான் இந்த தமிழன். ஐம்பதாயிரத்துக்கு சம்மதிப்பான் அப்படினு நெனச்சார் இன்டர்வ்யூ நடத்துபவர்.
ஆனால்....
தனக்கு மூனு லட்சம் தந்தா அதுல ஒரு லட்சம் ஆபிசர்க்கு தாரேனு தமிழன் சொன்னதால ஆபிசர் சம்மதிச்சி தமிழன அனுப்புறதுனு தீர்மானம் ஆனது.
ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அதே தமிழன ரோட்ல வச்சி பாத்ததும் அதிர்ச்சி அடைந்தார் இண்டர்வியூ நடத்திய ஆபிசர்.
அப்ப அந்த தமிழன் சொன்னது ...
"மூணு லட்சத்துல ஒரு லட்சம் உங்களுக்கு தந்தேன். ஒரு லட்சம் கொடுத்து அந்த ஹிந்திக்காரன ராக்கெட்ல ஏத்தி விட்டேன்.பாக்கி ஒருலட்சம் நா எடுத்துக்கிட்டேன்."
!!!!!!!!!!!!!!!!!!!
Comments
Post a Comment