கிறிஸ்தவர்கள் பிற மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா?
*கிறிஸ்தவர்கள் பிற மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா?*
அநேக கிறிஸ்தவர்கள் பிறமத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்திகளை கூறுவதுண்டு.
கிறிஸ்தவர்கள் இதை செய்யலாமா? வேதம் என்ன சொல்லுகிறது?
2 யோவான் 1:10
*"ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்."*
ஒருவன் கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டுவராமல் வேறு உபதேசங்களை கொண்டு வருவானாகில் அவனை இல்லத்தில் அனுமதிக்காதே என்றும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள் என்றும் சொல்கிறது வேதம்.
இப்போது சொல்லுங்கள் தீபாவளி அல்லது இது போன்ற பண்டிகைகள் கிறிஸ்துவின் உபதேசத்தையா உங்களுக்கு கொண்டு வருகிறது. இல்லையே,
விக்கிரக(பிசாசு) உபதேசத்தை அல்லவா!
அப்படியானால் வாழ்த்துதல் சொல்ல கூடாதல்லவா!
இந்த வேத வசனத்தை மீறி வாழ்த்து சொல்பவர்களை வேதம் என்ன சொல்கிறது.
2 யோவான் 1:11
*"அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான்."*
பாருங்கள் நீங்கள் அப்படி வாழ்த்துதல் சொன்னால் அவர்கள் கிறிஸ்துவை அறியாமல் செய்கிற துர்கிரியைகளுக்கு கிறிஸ்துவை அறிந்த நீங்களும் பங்குள்ளவர்களாகிறீர்கள்.
*ஆகவே சிந்தனை செய்வீர்.*
Comments
Post a Comment