ஃபாஸ்ட் ஃபுட் கடை

தயவு செய்து
படியுங்கள்

‘ஓட்டலில்
சாப்பிடாதீங்க’
ஒரு முன்னாள்
ஓட்டல் உரிமையாளர் தனது
தொழில் ரகசியங்கள்(!)  பற்றி
முகநூலில் எழுதியிருக்கிறார்.

அதிர்ச்சி
ரகம் தான் இவரது முகநூல்
ஸ்டேட்டஸும்.

1.
ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்
வைத்திருக்கும்
நாங்கள்
அன்று வாங்கிய
சிக்கனை
மட்டுமே உபயோகப்படுத்து
இல்லை.

2 அல்லது
3 நாட்களுக்கு
முன் வாங்கிய
சிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம்.

அதை
வினிகரில்
கழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை  வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.

2.
சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக
உள்ள சிக்கனை
சிவப்பாக மாற்ற
ஆரஞ்சு பவுடர் பயன்படுத்துகிறோம்.

ஆனால்,
அது தடை 
செய்யப்பட்ட பொருள். அந்த
ஆரஞ்சு பவுடரை
உங்கள்
கையில் கொட்டி
திருப்பி
கை கழுவினால்
கூட அந்த
சிவப்பு சாயம்
உங்கள் கையில்
2  நாட்களுக்கு
இருக்கும்.

3.
சோயா சாஸ்...
விலை அதிகமாக இருப்பதால்
இதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை.

மாறாகத்
தண்ணீரோ அல்லது
ஒரு  வாரத்துக்கு
முன்னர் உபயோகப்படுத்திய எண்ணெயோ
கலந்து செய்கிறோம்.

4.
எந்த
ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும்
சூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.

5.
ஃப்ரைடு ரைஸ்
செய்யும் போது
சட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக
அதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.

6.
இன்னொன்று
சொன்னால் நம்ப மாட்டீர்கள்...

ஃப்ரைடு ரைஸ் செய்யும்
சட்டியை நாங்கள்
ஒரு வாரத்துக்குக்
கழுவ மாட்டோம்.

கழுவி எண்ணெய் 
பசை போய்விட்டால் அடுத்த நாள்
எங்களுக்கு
அதிக கேஸ் வேஸ்ட்டாகிவிடும்.

7.
மோனோசோடியம் க்ளூட்டமேட்...
இதை அதிகமாக பயன்படுத்துகிறோம்.

உடலுக்குக் கேடு உண்டாக்கும்
பொருள்
என்று பலரும் சொல்கிறார்கள். 
இதைத் தொட்டு
நாக்கில் வைத்தால்
அந்த இடம்
மரத்து விடும்.
சோதித்துப் பாருங்கள்.

8.
மிளகுத் தூளில் வெண்மை
நிறத்துக்காக
கோல மாவு
கலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான்
நாங்கள் உபயோகப்படுத்துகிறோம்.

9.
காலாவதியான
தக்காளி சாஸ்
விலை கம்மியாகக் கிடைப்பதால்
அதையே உபயோகப்படுத்துகிறோம்.

10.
சில்லி சாஸ்...
அதை அருகில்
சென்று முகர்ந்து பார்த்தால்
முகம் சுளிக்கிற அளவுக்கு
கெட்ட வாடை
அடிக்கும்.
எல்லாம் மசாலா மணத்தில்  மறந்து போய்விடும்.

5 நிமிடத்தில்
8 பிளேட்
தயாராகிவிடும்.

ஒரு பிளேட்
50 ரூபாய்
என்றால் கூட
400 ரூபாய் சம்பாதித்துவிடுவோம்.

இந்த
ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் 
சாப்பிட்டு
என் உடலும் கெட்டுவிட்டது.
மற்றவர்களின்
உடல் நலனையும் கெடுக்கும்
இந்த வேலை
வேண்டாம்
என என் மனசாட்சி உறுத்தியதால், 
அதை மூடிவிட்டு
8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக
வேறு வேலைக்குச் செல்கிறேன்!-

தினேஷ்
(ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)
Forwarded as received from facebook

💭WhatsApp....

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*