சீஷர்களின் இரத்தசாட்சி

*"இயேசு கிறிஸ்துவின் சீஷர்களின் இரத்தசாட்சி மரணங்கள்"*

*1,மத்தேயு- எத்தியோப்பிய நாட்டில் குடல் சரிய குத்தப்பட்டு இறந்ததார்.*

*2, மாற்கு- அலெக்சாண்டிரியாப் பட்டணத்தில் தெரு வீதிகளில் நாயைப் போல் இழுத்துச் சென்று சாகடித்தார்கள்.*

*3, பெரிய யாக்கோபு- எருசலேம் நகரில் தலையை வெட்டிக் கொன்றார்கள்.*

*4, லூக்கா- கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிட்டுக் கொன்றார்கள்.*

*5, யோவான்- கொதிக்கும் எண்ணெய் உள்ள இரும்புச் சட்டியில் தூக்கிப் போட்டும் சாகாததால், பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இரகசியமாக தரிசன நூலை எழுதினார். பின்பு ஆள் ஆரவாரமற்ற அத்துவானக் காட்டில் பட்டினி கிடந்து கொடிய வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார்.*

*6, அந்திரேயா- சிலுவையில் அறைந்து அதிலிருந்தவாறே பிரசங்கிக்கச் சொன்னார்கள் இயேசுவின் போதனைகளை பிரசங்கித்துக் கொண்டே மரித்தார்.*

*7, பர்த்தலோமேயு- உயிரோடு தோல் உரிக்கப்பட்டு உயிரைவிட்டார்.*

*8, தோமா- சென்னையில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்.*

*9, யூதா- மரத்தில் கட்டி வைத்து அம்புகளை எய்து கொன்றார்கள்.*

*10, பர்னபா- தெசலோனிக்கே என்ற நகரில் கல்லெரியப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*11, பேதரு- சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டுக் கொல்லப்பட்டார்.*

*12, சின்னயாக்கோபு- கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் சாகாததால் தடியால் அடித்து சித்திரவதை செய்து சாகடித்தார்கள்.*

*13, பவுல்- ரோமச் சிறையில் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருந்த வேளையிலும் பாட்டுபாடி சுவிசேஷம் அறிவித்தார். நீரோ என்ற ரோமப் பேரரசால் தலை துண்டிக்கப்பட்டு மாண்டார்.*

*இதை படிக்கும் அன்பானவர்களே இதில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளவேண்டும். கிறிஸ்த்துவுக்குள் வருகிற  பாடுகளையும் நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுக் கொல்லும் போது தேவன் இரட்டிப்பான ஆசீர்வாதத்தை கொடுப்பார் விசுவாசிகளாகிய நாம் கர்த்தருக்காக ஊழியம் செய்வோம். மேலே நாம் படிக்கும் போது இத்தனை இரத்த சாட்சிகளை பார்த்தோம் அல்லவா பயமின்றி ஊழியம் செய்வோம்.*

*கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics