நூதன கிறிஸ்தவன்..!

என்னத்த_சொல்ல...

வேதத்தை பகுத்து பேசினால்,,,

இவ்ளோ டீப்பா அவசியமில்லை என்கிறான்
நூதன கிறிஸ்தவன்..!

------<>-----<>------<>------

உணர்வுப்பூர்வமாய் பேசினால்,,,

இது ஏமாற்று வேலை என்கிறான்
நூதன கிறிஸ்தவன்..!

-----<>-----<>------<>------<>-----

உணர்ச்சி பொங்க பேசினால்,,,

இது மாம்சத்தின் வெளிப்பாடு என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

----<>-----<>-----<>------<>----

ஆடம்பரத்தை குறைத்துக்கொள் என்று பேசினால்,,,

இது ஆடம்பரம் அல்லஇது ஆசீர்வாதம் என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

-----<>------<>-----<>------

குத்தாட்டம் கொரங்காட்டம் போடாதே ராசா என்று சொன்னால்,,,

நாங்கள் கர்த்தரை
கொண்டாடுகிறோம்
என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

------<>------<>-----<>------

உன் ஆடையை சரிபடுத்து என்றால்,,,

நீ பார்க்கும் சாடையை சரிப்படுத்து
என்கிறான்
நூதன கிறிஸ்தவன்..!

-----<>-----<>------<>------<>----

அறிவிக்கப்படாத இடத்துக்கு போ என்று சொன்னால்,,,

முதலில் நீ இந்த இடத்தை விட்டே போ என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

-------<>------<>-----<>-------

மாதிரியாக இரு என்று சொன்னால்,,,

நாங்க வேற மாரி ப்ரோ
என்கிறான்
நூதன கிறிஸ்தவன்..!

------<>-----<>------<>---------

நிறைவானதை தேடு என்று சொன்னால்,,,

நீ குறை சொல்வதைவிட்டு ஓடு என்கிறான் நூதன கிறிஸ்தவன்...!

-----<>-----<>-----<>------

பொறுமையாக சிந்தித்து செயல்படு என்று சொன்னால்,,,

நீ பொறாமையால் சொல்கிறாய் என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

-----<>-----<>-----<>-------

கர்த்தரின் நியாயத்தீர்ப்பை ஞாபகப்படுத்தி பேசினால்,,,

நீ நியாயம் தீர்க்காதே என்கிறான் நூதன கிறிஸ்தவன்..!

-----<>----<>------<>------<>---

எதைப் பேசினாலும் அதை எதிர்த்துப் பேசும் பழக்கம் நூதன கிறிஸ்தவனின் இரத்தத்தோடு விஷம் போல் கலந்து விட்டது எனவே.....

நாம் சற்றுஒதுங்கி போவதே நல்லது ஏனென்றால்...

பேசும்படி மட்டும் அல்ல செயல்படும்படியாகவும்"அழைக்கப்பட்டவர்கள் நாம்"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது;
நான் அவைகளை அறிந்திருக்கிறேன்,அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.

பகிர்வு செய்தி.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*