யோசிக்க
🤝🤝🤝🤝🤝
ஒரு ஊரில், மழை வேண்டி, விஷேச பூஜை நடத்தப்பட்டது.
2,3 நாட்களுக்கு முன்பே, அனைத்து ஊர்களுக்கும் அறிவிப்பும் செய்திருந்தார்கள்.
மொத்த ஊர் மக்களுமே அன்றைய தினம்,
திறந்த வெளியில் ஒன்றுகூடி இருந்த போது,
ஒரு சிறுவர் மட்டும்,
கையில் குடையுடன் வந்திருந்தார்.
அதற்குப் பெயர் தான், இறைவன் மீது கொண்ட:
'திடமான நம்பிக்கை' : FAITH
(2)
ஒரு தாய், தான் பெற்றெடுத்த பிள்ளையை,
மேலே தூக்கி வீசினாலும்,
அந்தக் குழந்தை பயப்படாமல்,
சிரித்துக் கொண்டே இருக்கும்.
காரணம், தன்னை பெற்றெடுத்த தாய் தன்னை கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொள்வாள் என்று அந்த குழந்தைக்கு தெரியும்.
அதற்குப் பெயர் தான், தாய் தன் மீது கொண்ட பாசம், அன்பு:
இதுவும் நம்பிக்கை தான். : TRUST
(3)
ஒவ்வொரு இரவும் நாம் படுக்கைக்குச் செல்லும்போது,
மறு நாள் காலை நாம் கண் விழிப்போம், உயிருடன் தான் இருப்போம் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.
இருந்தாலும்:?
மறு நாள் காலை, எழுந்து விட அலாரம் வைக்கிறோம்.
அதற்குப் பெயரும்:
திட நம்பிக்கை தான். : HOPE
(4)
எதிர் காலத்தை பற்றிய எந்த வித 0% அறிவும் இன்றி,
பெரிய திட்டங்கள் தீட்டுகிறோம்.
அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டுகிறோம்.
இதுவும் கூட ஒரு வகை நம்பிக்கை தான்:
CONFIDENCE
(5)
உலகில், திருமணம் செய்த,
மற்றவர்கள் படும்,
துன்பம்,
துயரம்,
கஷ்டம்,
வேதனை,
அத்தனையையும் கண்கூடாக பார்த்த பின்பும்,
நமக்கு அதுபோல அமையாது என,
காதலிக்கிறோம்.
கல்யாண கனவில் மிதக்கிறோம்.
கல்யாணமும் செய்து கொள்கிறோம்.
இதுவும் ஒருவகை நம்பிக்கை தான். : LOVE
(6)
ஒருவர் கீழ்கண்ட வார்த்தையை அழகாய் எழுதியிருந்தார்.
எனக்கு வயது 59 அல்ல.........
இனிக்கும் 16 வயது இளைமையும்,
அதனுடன், 43 வருட கடினமான அனுபவமும்,
சேர்ந்து 59 வயது இளைஞன் நான்.
இதுவும் நல்ல ஒரு நம்பிக்கை,
'அணுகு முறை' தான் : ATTITUDE
(7)
இந்த அற்ப வாழ்க்கையை,
சிறிதளவே வாழும் நாம்:
இறைவன் மீது மாறாத முழுமையான நம்பிக்கையுடனும்,
நல்ல குறிக்கோளுடனும்,
அழகிய அணுகு முறையுடனும்,
வாழ்வோம்.
மற்றவற்றை அவன் நம்மை
படைத்து,
பரிபாளித்து,
பக்குவப்படுத்தி,
பரிமளிக்கச் செய்திருக்கும்
இறைவன் பார்த்துக் கொள்வான்.
- நம்பிக்கை -
💫💫💫💫💫
Comments
Post a Comment