வயது என்பதற்கு எந்த வேலியுமில்லை.. Just numbers அவ்வளவுதான்... வாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்! 20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான். எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம். 30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணுதான்.கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம். 40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும்,குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்.குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க. 50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும். 60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணுதான்.ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணுதான். 70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணுதான்.மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும். 80 வயசுக...