கட்டப்பட்ட ⛵ படகு
இப்படி இருந்தால் பரலோகம் செல்லுவோமா ?🤔🤔
👉ஒரு இரவு நேரத்தில்
2 குடிகாரர்கள்
ஒரு ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல
ஆற்றின் ஓரத்தில் இருந்த
ஒரு படகை பயன்படுத்தினர்
👉 குடி போதையில் இருந்த அவர்கள், வெகு நேரம் துடுப்பு போட்டு கொண்டே இருந்தார்கள் .
ஆனாலும்
அக்கரை வந்த பாடில்லை !!!!
👉பொழுது விடிந்து ,
போதை தெளிந்ததும்
அவர்கள் கண்ட காட்சி
அவர்களை திடுக்கிட வைத்தது !!!!
👉அக்கரைக்கு அவர்கள்
வந்து சேராத காரணம்
ஆற்றின் ஒரத்தில் இருந்த படகு 🛶
மரக்கிளை🏝ஒன்றில் கட்டப்பட்டிருந்தது தான் காரணம் ??
கட்டப்பட்ட அந்த கயிறை
அவிழ்க்காதபடி
நின்று கொண்டிருந்த
அந்த படகில் 🛶
துடுப்பு போட்டு என்ன பிரயோஜனம். ???
அக்கரை வந்து சேர முடியுமா ???
👉 நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் கூட பரலோகம் நோக்கி
பயணம் செய்கிற
நாமும் கூட
சில கட்டுகளை அவிழ்க்க வேண்டியது அவசியம்.
👉கிறிஸ்துவ நாமத்தை தரித்து கொண்டதால் மட்டும்
நாம் பரலோக அக்கரைக்கு
செல்ல முடியாது.
👉 பராம்பரியமாக
நாங்கள் கிறிஸ்துவ பரம்பரை
என்பதால் மட்டும்
ஒருவர் பரலோகம் செல்ல முடியாது..
👉நாங்கள் ஊழியக்காரர்கள் குடும்பம் என்பதினால் மட்டும்
ஒருவர்
பரலோகம் செல்ல முடியாது.
👉வெள்ளுடை தரித்து விட்டோம்,
நகையை கழற்றி விட்டோம்
என்பதினால் மட்டும்
ஒருவர் பரலோகம்
செல்ல முடியாது.
👉வேதாகமம்
பரலோக ராஜ்யத்திற்கு தடையான
சில காரியங்களை சொல்கிறது.
அது நம்மில் காணப்படுகிறதா? என ஆராய்ந்து
அந்த கட்டுகளை
அவிழ்த்து விட்டு,
பரலோக பிரயாணத்தை நோக்கி உற்சாகமாக முன்னேறுவோம் !!!
1. விபச்சாரம்
2. வேசித்தனம்
3. அசுத்தம்
4. காமவிகாரம்
5. விக்கிரக ஆராதனை
6. பில்லி சூனியம்
7. பகைகள்
8. விரோதங்கள்
9. வைராக்கியங்கள்
10. கோபங்கள்
11. சண்டைகள்
12. பிரிவினைகள்
13. மார்க்க பேதங்கள்
14. பொறாமைகள்
15. கொலைகள்
16. வெறிகள்
17. களியாட்டுகள
போன்ற கட்டுகள்
நம்மை கட்டி வைத்திருந்தால்
அந்த கட்டுகளை அவிழ்த்து விட்டு
அக்கரையாம்
பரலோக கரையை நோக்கி
உற்சாகமாக முன்னேறுவோம்.
👉அப்போஸ்தலர் பவுல் போல
நல்ல போராட்டத்தை போராடுவோம்.
👉ஓட்டத்தை ஜெயமாய் முடிப்போம்.
👉விசுவாசத்தை காத்துக் கொள்வோம்.
👉நீதியின் கிரீடத்தை பெற்றுக் கொள்ளத்தக்கதாக
பயணிப்போம்.
ஆமென்..
🙏🙏🙏🙏🙏
Comments
Post a Comment