பெண்களை மதிப்போம்...

எங்காவது வெளியே சென்றிருக்கும் போது சிறுநீர் கழிப்பதற்காகக் கழிப்பிடம் இல்லாமல் வீடு செல்லும் வரை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவஸ்தை. (இதனால் தான் பல பெண்கள் பின்னர் பல சிறுநீர் நோய்க்கு உட்படுகிறார்கள்)

பயணத்திலோ, அலுவலகத்திலோ அல்லது நடந்து சென்று கொண்டிருக்கும் போதோ அவசரமாய் கைப்பையில் தேடி நாப்கினை எடுத்து அதை மாற்ற இடம் தேடி அலையும் கொடுமையை ஏதோ ஒரு கூட்டத்தில் இலேசாய் ஆடை விலகி உள்ளாடை வெளியே தெரிய நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்வையிலேயே கற்பழிக்கும் ஆயிரம் கண்களை கடந்து செல்லும் ஒரு சிரமத்தை.

ஆள் நடமாற்றம் அதிகமற்ற ஒரு சாலையில் நான்கு ஆண்கள் கூட்டமாய் நிற்கையில் அவர்களை கடந்து செல்ல வேண்டிய ஒரு பெண்ணின் உளவியலை..

பயணத்திலோ கூட்ட நெரிசலிலோ பாலுக்கு அழும் குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாத வேதனையான நிலையை..

மாதவிலக்கு நாட்களில் கூட பல கிலோமீட்டர் நடந்தோ அல்லது நாள் பூராகவும் நின்றோ வேலை பார்க்க வேண்டிய துயரம் நிறைந்த நாட்களை.

ஆண்களால் முழுமையாக புரிந்துகொள்ள இயலுமா என்பது சந்தேகமே.

அது ஒருபோதும் ஆண்களால் முடியாது.. இவ்வளவையும் வெகு சாதாரணமாய் அனுதினமும் கடந்து செல்லும் பெண்களின் வலிமையை ஆண்களால் ஒருபோதும் பெற முடியாது.

இந்த வலிமையைப் பெற பெண்களின் தியாகம் பெரிது., அதை எல்லாம் தாங்கிக் கொண்டும், 

உலகத்தின் அத்தனை கசப்புகளையும் மனதில் சுமந்துக் கொண்டும்  புன்னகையுடன் செல்லும் ஒரு பெண்ணை இனி சாலையில் சந்திக்க நேர்ந்தால் அவர்களுக்கு நீங்கள் எந்த மரியாதையையும் தர வேண்டாம்.. அவர்களை அவர்கள் பாதையில் அமைதியாக செல்ல வழி விடுங்கள்.

என் சகப் பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வோம்.

என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவோம்.

என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்போம்.

எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டோம்.

பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.

பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டோம்.

பெண்களின் உணர்வுகளை மதிப்போம்.

பெண்மையைப் போற்றுவோம்.

- படித்ததில் பிடித்தது.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*