முழு வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து

*வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் மேசியாவை பற்றினதே ஆகும்*

வேதாகமத்தில் எத்தனை புத்தகங்கள் மேசியாவை பற்றியது? எல்லா புத்தகங்களுமே மேசியாவாகிய யெஷுஆவையே சில வழியிலோ அல்லது வழிகளிலோ அர்த்தப்படுத்துகின்றன. _"வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்….என்னை குறித்து சாட்சியிடுகிறவைகளும் அவைகளே"_ (மத்தேயு 5:39). அவைகளில் பின்வருபவைகளை கவனிக்கவும். 

💙 ஆதியாகமத்தில் (22:18) *அவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்து* 

💙 யாத்திராகமத்தில் (12:21) *அவர் பஸ்கா ஆட்டுக்குட்டி* 

💙 லேவியராகமத்தில் (16:6) *அவர் பாவநிவாரண பலி*

💙 எண்ணாகமத்தில் (21:9) *அவர் தாமிர சர்ப்பம்* 

💙 உபாகமத்தில் (31:30) *அவர் மோசேயினுடைய பாடலின் பாடகர்*

💙 யோசுவாவில்  *அவர் தம்முடைய ஜனங்களின் இரட்சகர் (அ) மீட்பர்*

💙 நியாயாதிபதிகளில் *அவர் மகா பெரிய நியாயாதிபதி* 

💙 ரூத்தில் *அவர் உறவினர் - மீட்பர்*  

💙 1 சாமுயேலில் *அவர் யாவே தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்* 

💙 2 சாமுயேலில் *அவர் பராக்கிரமமுள்ள யுத்தவீரன்* 

💙 1 இராஜாக்களில் *அவர் ஆலயத்தை கட்டினவர்*

💙 2  இராஜாக்களில் *அவர் நிறைவேறுதலான யோய்தா*

💙 1 நாளாகமத்தில் *அவர் மகா பெரிய நிர்வாகி* 

💙 2 நாளாகமத்தில் *அவர் ஞானம் மற்றும் செழுமையின் இராஜா*

💙 எஸ்ராவில் (1:1-4) *அவர் பாபிலோனிலிருந்து விடுதலையை* பிரகடனப்படுத்தியவர்

💙 நெகேமியாவில் *அவர் பட்டணத்து அலங்கங்களை மறுபடியும் எடுப்பித்து கட்டியவர்*

💙 எஸ்தரில் *அவர் நிறைவேறுதலான ஆகாஸ்வேரு*

💙 யோபுவில் (33:24) *அவர் மீட்கும் பொருள்* 

💙 சங்கீதத்தில் *அவர் யுகா யுகங்களின் கீதம்*

💙 நீதிமொழிகளில் (8:1-36) *அவர் ஞானமும் புத்தியும்* 

💙 பிரசங்கியில் *அவர் மகா பெரிய பிரசங்கியார்*

💙 உன்னதப்பாட்டில் *அவர் ஆத்தும நேசர்*

💙 ஏசாயாவில் (9:6) *அவர் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, நித்திய பிதா, சமாதான பிரபு*

💙 எரேமியாவில் (1:10) *அவர் ஜாதிகளின் மீதான மில்லினிய ஆளுகையாளர்*

💙 புலம்பலில் *அவர் புலம்பும் தீர்க்கதரிசி* 

💙 எசேக்கியேலில் *அவர் ஆலயத்தை சீர்பொருத்துகிறவர்*

💙 தானியேலில் (12:1) *அவர் மகா உபத்திரவ காலத்திற்கு முன்பே எழும்பி நிற்கக்கூடிய மிகாயேல்*

💙 ஓசியாவில் (11: 1; compare Matt. 2: 15) *அவர் எகிப்திலிருந்து அழைக்கப்பட்ட தேவனுடைய குமாரன்*

💙 யோயேலில் (3:16) *சீயோனிலிருந்து எழும்பும் யாவே தேவனுடைய சத்தம்*

💙 ஆமோசில் (9:14,15) *அவர் இஸ்ரயேலை சீர்பொருந்த செய்வதில் தேவனுடைய ஏஜென்ட்*

💙 ஒபதியாவில் (21) *அவர் இரட்சகர்களில் பிரதானமானவர்*

💙 யோனாவில் *அவரே அடையாளம்* (மத்தேயு 12:39,40)

💙 மீகாவில் (5:2) *அவர் இஸ்ரயேலில் ஆளுபவர்*

💙 நாகூமில் (1:15) *அவர் சமாதானத்தை கூறுபவர்* 

💙 ஆபகூக்கில் (3:13) *அவர் இரட்சிப்பை கொண்டுவரக்கூடிய அபிஷேகிக்க பட்டவர்*

💙 செப்பனியாவில் (3:9) *அவர் பூமியிலே சத்தியத்தை சீர்படுத்துகிற தேவனுடைய ஏஜென்ட்*

💙 ஆகாயில் (2:23) *அவர் தேவனுடைய ஊழியக்காரனாகிய செருபாபேல்* 

💙 சகரியாவில் (3:8,9; 4:7,9; 6:12,13) *அவர் கிளை, ஏழு கண்களையுடைய தலைகல், ஆலயத்தை கட்டுபவரும் அதை முடித்து தீர்ப்பவரும்*

💙 மல்கியாவில் (3:1) *அவர் உடன்படிக்கையின் தூதர்*

🧡 மத்தேயுவில் (27:37) *அவர் யூதர்களின் இராஜா*

🧡 மாற்குவில் (1:11) *அவர் தேவனுடைய நேச குமாரன்* 

🧡 லூக்காவில் (1:32) *அவர் தாவீதின் சிங்காசனத்தை சுதந்தரிப்பவர்*

🧡 யோவானில் (14:6) *அவர் வழியும்,சத்தியமும் ஜீவனுமானவர்*. 

🧡 அப்போஸ்தல நடபடிகளில் *அவர் சபையின் அதிகார பலமானவர்*

🧡 ரோமர் நிரூபத்தில் (5:1) *அவர் தேவனுடனான சமாதானத்தை கொண்டுவருபவர்* 

🧡 1 கொரிந்தியரில் (1:24) *அவர் தேவனுடைய வல்லமையும் ஞானமும் ஆவர்*

🧡 2 கொரிந்தியரில் (5:18-21) *அவர் ஒப்புரவாக்குபவர் ஆவார்* 

🧡 கலாத்தியர் நிரூபத்தில் (1:12; 3:13) *அவர் மெய்யான சுவிசேஷத்தை வெளிப்படுத்துபவரும், நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்கக்கூடிய மீட்பரும் ஆவார்*

🧡 எபேசியர் நிரூபத்தில் (2:14) *அவர் நமது சமாதானம்*

🧡 பிலிப்பியர் நிரூபத்தில் (4:13) *அவர் நம்மை பலப்படுத்துகிறவரும், எல்லாவற்றிலும் நிறைவானவரும் ஆவார்*

🧡 கொலோசேயர் நிரூபத்தில் (1:15) *அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்*

🧡 1 தெசலோனிக்கேயரில் (4:13-18) *அவர் மரித்தோரில் நித்திரையாயிருக்கிறவர்களை எழுப்புகிறவர்* 

🧡 2 தெசலோனிக்கேயரில் (1:7,8) *அவர் துன்மார்க்கனை அழிப்பவர்*

🧡 1 தீமோத்தேயுவில் (6:16) *அவர் சாவாமையும், காணக்கூடாதவருமானவர்*

🧡 2 தீமோத்தேயுவில் (4:8) *அவர் தமது பிரசன்னமாகுதலின் போது ஈவளிக்கக்கூடியவர்*

🧡 தீத்துவில் (2:13) *அவர் நாம் நம்பியிருக்கிற அனந்த பாக்கியம்* 

🧡 பிலேமோனில் (1:3) *அவர் நமது சமாதான காரணர்*

🧡 எபிரேயரில் (7:1-28) *அவர் ஒப்புரவாக்கக்கூடிய நமது பிரதான ஆசாரியர்*

🧡 யாக்கோபில் (2:1) *அவர் மகிமையுள்ள கர்த்தர்*

🧡 1 பேதுருவில் (5:4) *அவர் பிரதான மேய்ப்பர்*

🧡 2 பேதுருவில் (3:13) *அவர் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியின் அதிபதி*

🧡 1 யோவானில் (2:1,2) *அவர் நமது பரிந்து பேசுகிறவரும், சபை மற்றும் உலகின் 
பாவங்களை சினம் தணித்து சாந்தப்படுத்தும் பலியுமாவார்*

🧡 2 யோவானில் (Vs.3) *அவர் பிதாவினுடைய குமாரன்*

🧡 3 யோவானில் (Vs.7) *அவரே நாமம்*

🧡 யூதாவில் (Vs.24) *அவர் நாம் வழுவாதபடி நம்மை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர்*

🧡 வெளிப்படுத்தின விசேஷத்தில் (3:14; 22:16) *அவர் ஆமென், உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி, தேவனுடைய சிருஷ்டிப்பின் ஆதி, தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமும் ஆவார்*

இவ்வாறு வேதாகமத்தின் ஒவ்வொரு புத்தகமும் மேசியாவாகிய யெஷுஆவை சாட்சிபடுத்துகிறதை நாம் கண்டோம். இதனுடைய உபதேசங்கள், கற்பனைகள், வாக்குத்தத்தங்கள், புத்திமதிகள், தீர்க்கதரிசனங்கள், சரித்திரங்கள் மற்றும் முன்னடையாளங்கள் ஆகியவைகளில், சபை மற்றும் உலகத்திற்கான தேவனுடைய மா உன்னத இரட்சிப்பின் திட்டத்தில் மையம் கொண்டுள்ள மேசியாவாகிய யெஷுஆவையே ஏதேனுமொரு வகையில் சுட்டி காண்பிக்க கூடியவைகளாகவே உள்ளன. நாம் வேதத்தை போதிக்கும்போது, நமது கர்த்தராகிய யெஷுஆ கிறிஸ்துவின் நாமத்தையும், பரம பிதாவின் நாமத்தையும் மேன்மைப்படுத்தவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*