மூல உபதேசம் என்றால் என்ன ?
இந்த வேத வசனங்களின் விளக்கம் தேவன் என் சிந்தனையில் வைத்தது இதோ !
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக! இன்றைய நாளிலே நாம் தியா னத்திற்கென்று தெரிந்து கொண்ட தேவ வசனங்கள் எபிரேயர் 5 ; 12 to 14.
காலத்தைப் பார்த்தால்
போதகராயிருக்க வேண்டிய உங்களுக்குத்
தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது. நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல.
பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள் என்று எழுதப் பட்டிருக்கிறது.
மூல உபதேசம் என்றால் என்ன ?
எபிரேயர் 6 ; 1 , 2படித்துப் பாருங்கள்.
ஆகையால் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் , தேவன் பேரில் வைக்கும் விசுவாசம்
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம் , கைகளை வைக்குதல் மரித்தோரின் உயிர்த்தெழுதல் , நித்திய நியாயத்தீர்ப்பு
என்பவைகளாகிய
அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல்
என்று எழுதப் பட்டிருக்கிறது. இது தான் மூல உபதேசம்.
அதாவது ஒரு கட்டடம் கட்ட வேண்டுமானால் அஸ்திவாரம் போட்டு அதன் மேல் கற்களால் கட்டடம் கட்டி கூரை போட்டு மேலும் பல வேலைகள் செய்து அதை முடிக்க வேண்டும். அப்படியல்லாமல் அஸ்திவாரம் போட்டு நாலு லைன் கல் வைத்து மீண்டும் அது இடிந்து போய் மீண்டும் கட்டி மீண்டும் இடிந்து போனால் கட்டடம் எப்படி முழுமையாகும் ?
அதே போல் மனந்திரும்பி தேவனுக்குள் பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் எடுப்பது தான் நாம் கிறிஸ்துவுக்குள் போட்ட அஸ்திபாரம்.அதன் மேல் தேவனுடைய வார்த்தை யை பரிசுத்த ஆவியானவர் கொண்டு கட்டடமாகக் கட்ட வேண்டும். அதை மெருகூட்டுவது பரிசுத்த ஆவியின் கனிகளே.
அதாவது நம்முடைய ஜென்மசுபாவம் மாறி தேவசுபாவமாக மாறும் போது கட்டடம் கட்டி முடிக்கப்படும்.
நிறைய பேருக்கு அஸ்திபாரமே ஆட்டங்கண்டு கிடக்கிறது. அடிக்கடி பாவத்தில் விழுவதும் மன்னிப்பு கேட்பதுமாய் இருந்தால் கட்டடம் எப்படி கட்டி முடிக்க முடியும் ?
இவர்களைத் தான் தேவன் குழந்தைகளாயிருக்கிறீர்கள். நீங்கள் பாலை உண்ணத்தக்கவர்கள் என்று சொல்கிறார்.
பாலை குடித்து வாழ்வது குழந்தை. ஏனென்றால் குழந்தைக்கு திடஉணவு
ஜீரணமாகாது.
அதைப் போல ஆவிக்குரிய வாழ்க்கையில் தேறாதவர்களுக்கு வேதத்தின் ஆழம் தெரியாது.அது அவர்களுக்கு மறைபொருளாயிருக்கும்.தேவனுடைய வார்த்தையின் ஆழம் அதன் உள்ளே இருக்கும் இரகசியங்கள் தேறினவர்களுக்கே விளங்கும்.
எதில் தேறினார்கள் ?
எபிரேயர் 5 ; 14படித்துப் பாருங்கள்
பலமான ஆகாரமானது
நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக
முயற்சி செய்யும்
ஞானேந்திரியஞ்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும் என்று எழுதப் பட்டிருக்கிறது.
அதாவது நாம் வாழும் வாழ்க்கை தேவனுடைய வார்த்தையின்படி வாழ கற்று கொண்டால் தேவன் நமக்கு அந்த அறிவைத் தருகிறார்.
பூரணவயதுள்ளவர்கள் என்றால் நித்திய ஜீவனுக்குள் இருப்பவர்களே !
மேலும் ஒன்று கொரிந்தியர் 3 : 1 to 4வரை படித்துப் பாருங்கள்..
மேலும் சகோதரரே , நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல் மாம்சத்துக்குரியவர்களென்றும் கறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேச வேண்டியதாயிற்று.
நீங்கள் பெலனில்லாதவர்களானதால் உங்களுக்குப் போஜனங்கொடாமல் பாலைக் குடிக்கக் கொடுத்தேன். இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால்
இப்பொழுதும் உங்களுக்கு பெலனில்லை.
பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிற படியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா ?
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும்
வேறொருவன் நான் அப்பல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களல்லவா ? என்று எழுதப் பட்டிருக்கிறது .
இதைப் போலத் தான் நாமும் நான் அந்த சபை நீ இந்த சபை என்று பிரிவினை பார்க்கிறோம் அல்லவா ? அது தவறு.நாம் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள். நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து. நாம் அவருடைய அவயவங்கள் என்று எப்பொழுதும் சிந்தித்து
ஒருவர் துக்கப்பட்டால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவும் வேண்டியவற்றை செய்யவும் வேண்டும்.
நம் சரீரத்தில் ஒரு கை வலிக்கும் போது காலானது கையைப் பார்த்து நல்லா வேணும் உனக்குனு சொல்லுமா ? அதைப் போல் நாம் ஒருவர் கஷ்டப்படும் போது சிரிக்கக் கூடாது. இவங்க என்ன பாவம் செய்தாங்களோ என்று சொல்லக்கூடாது.
நாம் ஆவிக்குள்ளாக வளர வேண்டும். எது நமக்கு வளர்ச்சியைக் கொண்டு வரும் ?
எபேசியர் 4 ; 14 to 16வரை படித்துப் பாருங்கள்.
நாம் இனிக் குழந்தைகளாயிராமல்
மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல் ,
அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.
அவராலே சரீரம் முழுவதும் அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும்
இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு ஒவ்வொரு அவயமும் தன்தன் அளவுக்குத் தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே
அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்கிறது என்று எழுதப் பட்டிருக்கிறது.
தேவனைக் குறித்து பக்தி வைராக்கியம் எந்த அளவோ அந்த அளவு நமக்கு ஆவிக்குரிய வளர்ச்சி ஏற்படுகிறது.
பூரணமடைய வேண்டும்.
யார் பூரண புருஷன் ?
யாக்கோபு 3 ; 2படித்துப் பாருங்கள்
ஒருவன் சொல் தவறாதவனானால் அவன் பூரணபுருஷன்.
ஒன்று யோவான் 4 ; 18படித்துப் பாருங்கள்.
அன்பிலே பயமில்லை.
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும். பயமானது வேதனையுள்ளது.பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
எபிரேயர் 7 ; 19படித்துப் பாருங்கள்.
நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை.
அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்தும்.
அதிக நம்பிக்கை எப்படி வரும் ?
ரோமர்15 ; 13படித்துப் பாருங்கள்.
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே அதிகநம்பிக்கை வரும் என்று எழுதப் பட்டிருக்கிறது.
லூக்கா 6 ; 40படித்துப் பாருங்கள்.
சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல.தேறினவன் எவனும் தன் குருலைப் போலிருப்பான் என்று எழுதப் பட்டிருக்கிறது.
பிலிப்பியர் 3 ; 12படித்துப் பாருங்கள்.
நான் அடைந்தாயிற்று அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல் கிறிஸ்து இயேசு வினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்து கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
தேவ ஆலோசனை;
பிலிப்பியர் 3 ; 20.
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது.அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தேவ எச்சரிப்பு ;
எசேக்கியேல் 7 ; 5, 6படித்துப் பாருங்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் தீங்கு வருகிறது தீங்கு வருகிறது.
முடிவு வருகிறது முடிவு வருகிறது. அது உன் மேல் நோக்கமாயிருக்கிறது.
இதோ வருகிறது. ஆமேன்! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
Fentastic. Can i copy. & share ur post.
ReplyDeleteYou can bro, I just received it from Whats App.
Delete