உணவை வீணாக்காதீர்கள்
ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற இரண்டு இந்தியர்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்... இவர்கள் தட்டுகளில் கால்பகுதிக்குமேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப்பட்டருக்க... இருவரும் பில் தொகையை உணவு பறிமாறியவரிடம் செலுத்த முயன்றபோது... அவர்களின் பக்கத்து மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த இரு மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று... சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்... அந்த கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாக கேட்க, உடனே நம்மவர்கள், “நாங்கள் ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்திவிட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை...” என்று பேசியிருக்கிறார். அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச... சில மணித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி கடுமையான குரலில், "எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள்... பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த ...