காயீன் ஆபேல்

*ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.*
   *காயீனை உருவாக்குவது எப்படி?*
1.  பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2.  கெட்ட வார்த்தைகளைப் பேசும்போது சிரித்து மகிழ்.
3.  ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4.  தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5.  அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6.  அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7. பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு.
8.  பணம் கேட்கும்
போதெல்லாம் கொடு.
9.  அவனுக்கு எதையும் மறுக்காதே.
10. மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11. அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12. *கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.*
*# *ஆபேலை உருவாக்குவது எப்படி?*#*
1.  கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு
-நீதிமொழிகள் 22:6.
2.  தேவையானபோது தண்டனை கொடு
-நீதிமொழிகள் 22:15.
3.  முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு
-2 தீமோத்தேயு 1:5.
4.  நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு
-சங்கீதம் 119:9.
5.  ஜெபிக்கக் கற்றுக்கொடு
-மத்தேயு 18:20.
6.  தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு
-புலம்பல் 3:27.
7.  ஆவிக்குரியவை
களுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்
-1 தீமோத்தேயு 4:8.
8.  பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு
- 1 பேதுரு 5:5.
9.  தாய்மையின் மேன்மையை உணர்த்து
-1 தீமோத்தேயு 5:25.
10.  சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு
-எபிரெயர் 10:25.
11.  நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு
-ரோமர் 13:1.
12. நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்
-ரோமர் 12:17.
   *???* *நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? அல்லது ஆபேலா?* ???
ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்ட பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது ஒரு தந்தை,தாயின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம்!
இவையே அப்படி உருவாக்கிவிடுகிறது..
It's for Parents. ‍‍‍
whatsapp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*