கடவுள் இல்லையா?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட
மீசையை ட்ரிம்
பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு.
அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட
பேசிக்கிட்டே தன்னோட வேலையையும்
பார்க்கிறாரு...
அப்ப அவங்க பேச்சு கடவுள்
இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்டுக்குள்ள போச்சு...
அப்ப அந்த முடி திருத்துபவர்,
"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான்
நம்பவில்லை.."
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"
"ஓகே... நீங்க இப்ப நம்ம தெருவுல
நடந்து பாருங்க... அப்ப
உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு.
கடவுள்
இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக்
குழந்தைகள்? ஏன்
இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால்
நோயும் இருக்காது வலியும் இருக்காது.
கடவுள்
அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக
இதனை அனுமதிக்க வேண்டும்?"
இதற்கு பதில் சொன்னால் அது பெரிய
வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த
கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல்
கடையை விட்டு வெளியேறுகிறார்.
அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக
நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான
தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு
மீண்டும் கடைக்குள்
சென்று அந்த முடி திருத்துபவரிடம்,
"உங்களுக்கு ஒன்று தெரியுமா?
முடி திருத்துபவர் கூட இந்த உலகத்தில் இல்லை"
அதிர்ச்சியான முடி திருத்துபவர்,
"அது எப்படி சொல்வீர்கள்? நான் இங்குதான் உள்ளேன்.
உங்களுக்காக உங்களை அழகுபடுத்துவதற்காக நான்
இருக்கிறேன்."
"இல்லை... அப்படி முடி திருத்துபவர் என்பவர்
இருந்திருந்தால் இப்படி நீளமான முடியுடனும்
ட்ரிம் செய்யப்படாத தாடியுடனும் இவனைப் போல
ஒருவன் இந்த ஊரில் இருக்க மாட்டான்."
முடி திருத்துபவர், "நாங்கள் இருக்கிறோம். ஆனால்
எங்களிடம் வராமல் ஒருவன் இருந்தால் இப்படித்தான்
இருப்பான். அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக
முடியும்?"
"மிகச் சரியாகச் சொன்னீர்கள். அதே போலத்தான்
கடவுள் என்பவர் இருக்கிறார்.
மக்கள் அவரைத் தேடி, சரணடையாமல்
கடவுள் இல்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?"
- இந்தக் கேள்வியில் முடி திருத்துபவர் வாயடைத்துப் போனார்...
*"நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்..."* (1நாளாகமம் 28:9).
*"உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைக் கண்டுபிடிப்பீர்கள்; நான் உங்களுக்கு காணப்படுவேன்."* (எரேமியா 29:13-14).  
ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.
மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.
சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான்.
இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.
‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்!"’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.
கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்! 
*"கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே..."* (அப்போஸ்தலர் 17:27).

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*