தோல்வி
அடித்து கிழித்த
கசையும் தோற்றது...
கசையும் தோற்றது...
தலையை தாக்கிய
கோலும் தோற்றது....
கோலும் தோற்றது....
நெற்றியை குடைந்த
முள்முடி தோற்றது...
முள்முடி தோற்றது...
கனத்தோடு அலுத்திய
சிலுவையும் தோற்றது...
சிலுவையும் தோற்றது...
உருவி பாய்ந்த
ஆணிகள் தோற்றது...
ஆணிகள் தோற்றது...
கசப்பை தந்த
காடியும் தோற்றது....
காடியும் தோற்றது....
விலாவை பிளந்த
ஈட்டியும் தோற்றது...
ஈட்டியும் தோற்றது...
புரட்டி வைத்த
கல்லும் தோற்றது....
கல்லும் தோற்றது....
காவலர் சுற்றிய
சங்கிலி தோற்றது....
சங்கிலி தோற்றது....
அரசு வைத்த
முத்திரை தோற்றது....
முத்திரை தோற்றது....
இப்படி இருக்க காவிநிறமே
எதை கொண்டு நினைக்கின்றாய்..
எதை கொண்டு நினைக்கின்றாய்..
அடித்தால் கிறிஸ்தவம்
அழிந்துவிடும் என்று ....
அழிந்துவிடும் என்று ....
நாங்கள் ஆராதிப்பவர்
மரணத்திற்கே மலர் வளையம்
வைத்து வழி அனுப்பியவர்
என்பதை மஞ்சம் சாயும் போதும்
மறந்து விடாதே .... .
மரணத்திற்கே மலர் வளையம்
வைத்து வழி அனுப்பியவர்
என்பதை மஞ்சம் சாயும் போதும்
மறந்து விடாதே .... .
Comments
Post a Comment