நான் ஏன் யோகாவைப் பின்பற்ற மாட்டேன்?

*நான் ஏன் யோகாவைப் பின்பற்ற மாட்டேன்?*
(கிறிஸ்துவின் நண்பர்களுக்கு மட்டும்)
1. யோகா என்பது முழுமுதல் இந்துத்துவம். யோகா கூறும் ஆசன நிலைகளில்தான் பெரும்பாலான இந்து சிலைகளும் அமைந்திருக்கின்றன.
#இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் யோகாவை நான் ஏன் பின்பற்றவேண்டும்?
2. இந்துத்துவத்தின் கர்மா, தர்மா, போன்ற தர்மங்களைவிட யோகம் தான் முக்தியடைவதற்கான மிகச்சிறந்த வழியாக யோகிகளால் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் இந்து வேதங்கள் எல்லாம் யோகத்தின் மூலமாய்த்தான் வெளிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.
#இயேசுக்கிறிஸ்து, வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று தன்னையே கொடுத்து எனக்கு பரலோகவாழ்வை நிச்சயித்துவிட்டபிறகு எனக்கு ஏன் யோகா?
3. யோகாவின் குருவாகிய பதஞ்சலி , பாதி பாம்பும் மீதி மனிதனுமானவன்! அதாவது
ஆதி சேஷன்!
விவிலியத்தின் படி பழைய பாம்பு!
இருந்த இடம் ஏதேன் தோட்டம்!
செய்தவேலை மனுக்குலத்தையே வீழ்த்தியது!
#இம்மாபெரும் ஏமாற்றுக்குள் மீண்டும் நான் போய் விழ நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாளல்ல!
4. அடிப்படையில் யோகா என்பது மனதை வெறுமையாக்குவது!
வெறுமை உச்சமாகும்போது வாழ்க்கையில் பிடிப்பற்று, எல்லாமும் துறந்து நதிக்கரையிலும் மலைக்குகையிலும் போய் அமர்ந்துவிடும் அபாயம் அதிலுண்டு!
#எனக்கு வெறுமை தேவை இல்லை! விவிலியம் கூறும் தூய ஆவியானவரால், தினமும் நிரப்பப்படவே நான் விரும்புகிறேன்!
படைப்புகளை ரசிப்பதிலும் கர்த்தரை ருசிப்பதிலும் நான் கரைந்துபோகிறேன்!
5. யோகா என்னை பரிசுத்தமாக்காது! உலகப்புகழ் பெற்ற பல யோகிகள் விபச்சாரிகளிடம் போகிற விடியோக்களும், கஞ்சா, விஸ்கி, சிகரெட் அடிக்கும் காட்சிகளும் வலைத்தளங்களில் நிறைந்து வழிகிறது!
#பரிசுத்த வேதாகமம் நான் பாவம் செய்கிறபோதெல்லாம் என்னை கண்டித்துணர்த்துகிறது! நான் கர்த்தரிடம் மண்டியிட்டு மனம்திறக்கும் போதெல்லாம் பாவமன்னிப்பின் நிச்சயம் பெறுகிறேன், பரிசுத்தமாகிறேன்!
6. யோகாவின் ஆசன முறைகளிலும், மூச்சுப் பயிற்சியிலும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதாகக் சொல்லப்படுகிறது. இருக்கட்டும்!
#யோகா என்ற வார்த்தையைக் கூட கேள்விப்படாத என் மூதாதையர் நூறு வயததைத் தாண்டியிருக்கின்றனர்! வயதும் ஆரோக்கியமும் கர்த்தர் தருவது, நாம் நீட்டிக்கொள்வதல்ல! கொஞ்சம் சர்க்கரை வியாதியும், ரத்த அழுத்தமும் இருப்பது கர்த்தரை இன்னும் இறுக்கமாகப் பிடித்துக்கொள்வதற்கான ஏதுக்களாகத்தான் நான் நினைக்கிறேன்!
7. மன அழுத்தத்தை யோகா குறைக்கிறது என்று சொல்லி கார்ப்பரேட் அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் கட்டாயமாக்குகிறார்கள்!
#மனக்கவலைகள் காணாமல்போகும் ஒரே இடம் கல்வாரி மேடுதான்! கவலைகளைக் கரைப்பதற்கு இவ்வுலகத்தில் வேறு இடமே இல்லை! எனவே யோகா எனக்குத்தேவை இல்லை!
8. யோகாவின் தியான முறைகள் ஒன்றான பரம்பொருளோடு இணைப்பதாகக் கூறுகிறார்கள்!
#பழைய பாம்பாகிய பிசாசு இணைக்கும் பரம்பொருள் யார்தெரியுமா?
லூஸிபர்!
9. யோகா ஒரு மதமல்ல அது ஒரு எழுச்சி, எல்லாருக்குமுரியது என்கிறார்கள்!
#வெளியிலிருந்து பார்ப்பதற்குத்தான் அப்படித்தெரியும். மற்றபடி யோகா என்பது இந்துக்களின் hard core தியான முறை.
10. சில நட்சத்திர கிறிஸ்தவ ஊழியர்களும், சில அருட்தந்தையர்களும், சில பாதிரியார்களும், கொஞ்சம் கிறிஸ்தவர்களும் கூட யோகாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களாமே?
#சொந்தங்களில் முக்கியமானவர்களெல்லாம் நரகத்திற்குப் போகிறார்கள் என்பதற்காக நாமும் போய்விட முடியுமா? அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை, புத்தகங்களில் தேடி உண்மை எது என்பதைக் கண்டுபிடிக்க ஆர்வமில்லை.
*கால்டுவெல்லும் ரேனியஸும் ஏமி கார்மைக்கேலும் வில்லியம் கேரியும் வற்புறுத்தாததை ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற உணர்வுகூட இல்லை.*
அவர்களுக்கு அது மல்லிகைப்பூ! மாலை சூடி மகிழட்டும்.
எனக்கு அது மலம். மிதிக்கக்கூட அருவருக்கிறேன்.
பரிசுத்த வேதவசன தெளிவும்,விழிப்பும்,
உணர்வும் உள்ளவனுக்கு மட்டுமே இது புரியும்.
கிறிஸ்தவ யோகா என கூறி நம் மகா பரிசுத்தரை கேவலப்படுத்தாதீர்
*யோகா என்ற வார்த்தையே மிக மிக கேவலப்பதமான வார்த்தை...*.        Rt.Rev.Gladstone
whatsapp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*