Posts

Showing posts from December, 2020

துதி, ஸ்தோத்திரம், அல்லேலூயா

1. *துதி* என்றால் என்ன? 2. *ஸ்தோத்திரம்* என்றால் என்ன? 3. *அல்லேலூயா* என்றால் என்ன? 1. *துதி* என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. 2- *ஸ்தோத்திரம்* என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு தமிழில் நன்றி என்று பொருள். 3- *அல்லேலூயா* என்ற என்ற எபிரேய வார்த்தைக்கு தமிழில் தேவ நாமம் மகிமைப்படுவதாக என்று அர்த்தம் *விரிவாக*: 1- *துதி என்றால் என்ன*? துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி புகழ்வது. *தமிழ் வேதாகமத்தில்* : துதி/துதியுங்கள்/துதிப்பேன்/துதித்து போன்றவை மொத்தம் 252 முறை வருகிறது. ஆனால் – அவை மூல பாஷையில் வரும் போது வேறு சில வார்த்தைகளை கொண்டு கொஞ்சம் ஆழமாக உணர்த்தப்பட்டுள்ளது. துதி என்று தமிழ் வேதாகமத்தில் வரும் இடங்களில் *ஆங்கிலத்தில்* Glory (க்ளோரி) ; Praising (ப்ரைசிங்) ; Bless (ப்ளஸ்) ; Pray (ப்ரே) என்றும் Thanks (த்தேங்ஸ்) என்றும் அர்த்த வித்தியாசங்களுடன் காணப்படுகிறது. உதாரணத்திற்கு: 1-ஆதி 29:35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் *துதிப்பேன்* என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாட