வேதாகம பயண தூரங்கள்

வேதாகம பயணம் – பயணச்செய்திகள்

இயேசு கிறிஸ்து கப்பர்நகூமை மத்திய இடமாகக்கொண்டு ஊழியம் செய்ததை அறிய முடிகிறது.

கப்பர்நகூமிலிருந்து ⬇

பெதஸ்தா – 9. 7 கி.மீ

செசரியா, பிலிப்பி – 43.4 கி.மீ

கானா –  25. 7 கி.மீ

தல்மாத்தியா – 9.7 கி.மீ

கெனேசரேத்து (கலிலேயா) – 3.8 கி. மீ 

நாயீன்  –  35.4 கி.மீ

நாசரேத் – 32.2 கி.மீ

தீரு –    56.3 கி.மீ

சீதோன்  – 80. 4 கி.மீ

சீகார் (சமாரியா) –  88.5 கி.மீ  

கர்த்தராகிய  இயேசுவானவா் எருசலேமிலிருந்து நடைபயணம் – கடற்பயணம் செய்த ஊா்களும் பயண தூரமும்:

எருசலேமிலிருந்து ⬇ 

பெத்தானியா  –  3.2 கி. மீ

பெத்லகேம்  – 9.6 கி. மீ

பெத்பாகேல்  – 1.6 கி.மீ 

செசாியா  – 91.5 கி. மீ 

செசாியா,பிலிப்பி  – 168 கி.மீ

கப்பா்நகூம்   – 136 கி. மீ

சவக்கடல்   – 9.6 கி. மீ

எம்மாவூர் – 25.6 கி. மீ

எாிகோ  –  24 கி. மீ

யோப்பா    – 56 கி.மீ

யோா்தான்   – 33.6 கி. மீ

மத்திய தரைகடல்   – 52.9 கி. மீ

நாசரேத்    – 104 கி. மீ

சாலேம்   – 80 கிமீ

சமாாியா    – 57.6 கி.மீ

கலிலேயா கடல்    – 112 கி.மீ  


சிறப்பு செய்திகள்:

👉  தானியேல் தங்கியிருந்த கொலு மண்டபத்திலிருந்து (பாபிலோன்)  எருசலேம் தேவாலயம் வரை 1448 கி.மீ. தூரம். அங்கிருந்து பலகணியை திறந்து ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்தான். 

👉 எகிப்திலிருந்து கானான் தேசம் (இஸ்ரவேல் தேசம்) தூரம் – 613 கி.மீ  கால்நடை பயணமாக 11 நாளில் சென்று விடலாம், ஓய்வெடுத்துப்போனாலும் 15 நாளில் சென்று விடலாம். ஆனால் 40 வருடங்கள் ஆனது. 41 இடங்களில் பயணம்  தடைப்பட்டது. காதோசு வனாந்திரத்தில் வெறுமனே சுற்றித்திருந்தார்கள். இதற்க்கெல்லாம் முழு முதற் காரணங்கள், 

 1. இஸ்ரவேலர்களின் முறுமுறுப்பு    2. பயணத்தை வழிநடத்திய மூப்பர்களும் தலைவர்களும் 

👉 இயேசு பிறந்த பிறகு அவரை காண கிழக்கு தேசத்திலிருந்து வான சாஸ்திரிகள் வந்தார்கள். முன்னனையிலிருந்த இயேசுவை பார்க்கவில்லை. ஒரு வீட்டில் கண்டார்கள், அதுவும் பிறந்த குழந்தையை (Baby)  பார்க்கவில்லை, குழந்தையை (Child) கண்டார்கள். மேலும் ஏரோது ராஜா இரண்டு வயதிற்க்குட்பட்ட குழந்தைகளைத்தான் கொல்லச்சொன்னான். ஆக இயேசு 2 வயது குழந்தையாயிருந்தார். அவர்கள் குதிரையில் கிளம்பி எருசலேம் வர பயண தூரப்படி கணக்கிட்டால்  இரண்டு வருடமாகும். 

👉 எலியா கர்மேல் பர்வதத்தில் பாகால் தீர்க்கதரிசிகளை கொன்றுப்போட்ட பிறகு ஆகாப் ராஜா அந்த இடத்தைவிட்டு குதிரை ரதத்திலேறி யெஸ்ரயேலுக்குப்போனான். ஆனால் எலியா 27 கி. மீ தூரமுள்ள யெஸ்ரயேலுக்கு ஆகாப்க்கு முன்பே ஓடிப் போனான். குதிரை வேகத்திற்க்கு மீறி மனிதன் ஓட முடியாது. இது ஆவியானவர் எலியாவை எடுத்துச்சென்றார். (Transportation) 

👉 அதேபோல சுவிஷேசகர். பிலிப்பு காசா பட்டணத்து வழியாக செல்ல  தேவதூதனால் பிலிப் ஏவப்பட்டு சென்றார். எத்தியோப்பியா  ராஜாஸ்தீரியின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு கரையேறினபோது பிலிப்பை காணவில்லை ஆசோத்தில் காணப்பட்டார் என உள்ளது.  ஆப்பிரிக்காவில் உள்ள காசா பட்டணம் ஆசோத்திலிருந்து 6000 கி. மீ தூரம். 

எப்படி போனார்? ஆவியானவரால் கொண்டு போகப்பட்டார். (Transportation)  பின்னர் யோப்பா வழியாக செசரீயா போய் சுவிஷேசகத்தை பிரசங்கித்தார். 

நன்றி.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics