பாஸ்டர்


*பாஸ்டர் சிரித்தால்...*
இவருக்கு பக்தியே இல்லை என்பர்
*பாஸ்டர் அழுதால்...*
இவருக்கு விசுவாசமே இல்லை என்பர்
*பாஸ்டர் சாப்பிட்டால்...*
இவர் ஒரு சாப்பாட்டு பிரியர் என்பர்
*பாஸ்டர் உபவாசித்தால்...*
இவர் செய்வது வேதத்தின் படி தவறு
என்பர்
*பாஸ்டர் வெள்ளை துணி உடுத்தினால்..*
இவர் நடிக்கிறார் என்பர்
*பாஸ்டர் கலர் துணி உடுத்தினால்...*
இவரெல்லாம் ஒரு ஊழியரா? என்பர்
*பாஸ்டர் டை கட்டினால்...*
இவருக்கு தலக்கனம் அதிகம் என்பர்
*பாஸ்டர் மனந்திறந்து பேசினால்...*
இவர் ஒரு எமோஷன் பார்ட்டி என்பர்
*பாஸ்டர் அமைதியாய் இருந்தால்...*
இவர் பெருமைக்காரர் என்பர்
*பாஸ்டர் இயேசுவை பற்றியே பேசினால்...*
இவர் பூமியில் வாழ தகுதியில்லாதவர்
என்பர்
*பாஸ்டர் சத்தமாய் பேசினால்...*
இவர் மாம்சத்தில் பேசுகிறார் என்பர்
*பாஸ்டர் அமைதியாய் பேசினால்...*
இவர் ஒரு வல்மையற்ற ஆளு என்பர்
*பாஸ்டர் பாவத்தை கண்டித்தால்...*
இவர் பெரிய பரிசுத்தவானோ!? என்பர்
*பாஸ்டர் ஆசீர்வாதத்தை பற்றி பேசினால்...*
இவர் ஒரு பின்மாற்றக்காரர் என்பர்
*பாஸ்டர் குடும்ப ஒழுங்கை பற்றி பேசினால்...*
இதெல்லாம் சபையில் பேசக்கூடாது
என்பர்
*பாஸ்டர் கொடுத்தல் பற்றி பேசினால்...*
இவருக்கு பண ஆசை வந்துவிட்டது 
என்பர்
*பாஸ்டர் சத்தமிட்டு ஆராதித்தால்...*
இவ்ளோ சவுண்டு தேவையா? என்பர்
*பாஸ்டர் அமைதியாக ஆராதித்தால்...*
இதில் அபிஷேகமே இல்லையே என்பர்

*(தேவனால்* *அபிஷேகிக்கப் பட்ட* 
*இராஜாவை அற்பமாய் பேசி*
*அவனை அசட்டைபண்ணினார்கள்*
*அவனோ காது கேளாதவன்*
*போல இருந்தான்*.
*(1 சாமு 10:27)*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics