I am @ ஊழியம் not அட்டூழியம்;

*I am @ ஊழியம் not அட்டூழியம்;* 
+*- -*+ +*- -*+ +*- -*

*"ஊழியம்"* செய்தால் பூமியில் *பெருத்த* லாபமிருக்கிறது !!! எல்லாரும் ஊழியத்துக்கு *ஓடியாங்கோ !!!* 
என்று *இயேசு* 
கூவி அழைக்கவில்லை !!!

மாறாக... 
விரும்பி வந்தவர்களையும் 
*“சற்று பொறு !!!”* எனக்கு *"சீஷனானால்"* செல்லுஞ் 
செலவைக் *"கணக்குப்"* பார்த்து விட்டு, *"தீர்க்கமான"* முடிவெடுத்து விட்டு பின்னர் வா !!!” *"ஒழுங்காக"* யோசிக்காமல் *கலப்பையில் கை வைத்து விட்டு பின்னால் வருத்தப்படாதே !!!* என்கிறார்.
லூக்கா 14:25-35

தயவுசெய்து 
ஒரு முறை 
வாசித்துப் பாருங்கள். 
30-ஆம் வசனம் சொல்லுகிறபடி *"ஊழியம்"* என்பது *”வரவு"* பற்றி *"அல்ல"..???* 
*"செலவு”* பற்றியது.

*"சேவை"* கொள்வதல்ல சேவை செய்வதே 
*ஊழியம்*. 
(மத் 20:26)

பெற்றுக் கொள்வதல்ல விட்டுக் கொடுப்பதே 
*ஊழியம்*. 
(லூக்கா 14:33)

*ஐசுவரியத்தில்* பெருகுவதல்ல *தாழ்மையின்* சிந்தையில் பெருகுவதே 
*ஊழியம்.*
(மத் 11:29)

அடிப் பொடிகளை அல்ல...!!! 
*சீஷர்களைச்* சம்பாதிப்பதே 
*ஊழியம்...???*
(மத் 28:19)

சத்தியத்தை *"விற்று"* சம்போகமாய் வாழ்வதல்ல, சத்தியத்தைச் சொல்லி பலருக்கும் *"சத்துருவாய்"* மாறிவிடுவதே 
*ஊழியம்.*
(கலா 4:16)

தனக்கு *"ரசிகர்களைச்"* சேர்ப்பவன் ஊழியனல்ல...??? எல்லோருக்கும் *"அடிமையாய்"* மாறுபவனே 
*ஊழியன்*. 
(1 கொரி 9:19)

கரன்ஸியில் திளைப்பவனல்ல, *"கர்ப்ப"* வேதனைப்படுபவனே 
*ஊழியன்*
(கலா 4:19)

*மாலை*களுக்குக் கழுத்தைக் கொடுப்பவனல்ல, 
*பட்டயத்துக்குக்* கழுத்தைக் கொடுப்பவனே 
*ஊழியன்*.
(ரோமர் 16:4)

பிரபலத்தையல்ல 
பிறர் நலத்தை நாடுபவனே 
*ஊழியன்*.
(எபி 11:24,25)

பிறர் தோளில் அமர்ந்து *"பவனி"* வருபவன் 
ஊழியன் அல்ல. 
தன் தோளில் *"சிலுவை"* சுமப்பவனே 
*ஊழியன்*.
(லூக்14:27)

*ஊழியன்* என்பவன் விசுவாசிகள் 
*பணத்தில்* 
ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்குபவன் அல்ல. 
அநேகரை நீதிக்குட்படுத்தி ஆகாய *நட்சத்திரமாகப்* பிரகாசிப்பவன்.(தானி 12:3)

*ஊழியம்* செய்ய விரும்பும் யாரும் தயவு செய்து இன்றைய 
*"பிரபல"* ஊழியக்காரர்களைப் பார்க்காதிருங்கள். 
பார்த்தால் 
அவர்கள் *"சிக்கிய"* கண்ணிகளிலேயே நீங்களும் 
*"சிக்கிக்"* கொள்வீர்கள்...??

நீங்கள் யாரையாகிலும் *உதாரணமாகக்* காண விரும்பினால் வில்லியம் கேரி, ஜான்வெஸ்லி, ஒயிட்ஃபீல்ட், வில்லியம் பூத், ஹட்சன்டெய்லர், டேவிட் லிவிங்ஸ்டன், சாது சுந்தர்சிங், டி.எல்.மூடி, 
ஜார்ஜ் முல்லர் போன்ற *"தேவ"* மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்.

எல்லாவற்றையும் விட *ஆண்டவர் இயேசுவை* நோக்கிப் பாருங்கள். அவரிடம் நாம் *"கற்றுக்"* கொள்ள வேண்டிய ஒரு *"மகத்தான"* பாடம் இருக்கிறது.

*“அவர் தம்மைத் தாமே* *வெறுமையாக்கினார்* 
*(பிலி 2:7)”*

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics