பரிசுத்த வேதாகமம்

#வேதாகம #துணுக்குகள்:-

=>.தள்ளப்பட்ட வேதம்
(Appocrypha) எனப்படுவது யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத, கிரேக்க மொழியில் ஏழுதப்பட்ட 7 ஆகமங்கள் (புத்தகங்கள்) ஆகும். கத்தோலிக்க வேதத்தில் இதனை இணைத்துள்ளனர்.

=>.சீகன் பால்கு ஐயர் அவர்கள் மரித்தப்பின் அவர் விட்டு சென்ற பழைய ஏற்பாட்டின் ஒரு சில ஆகமங்களை பெஞ்சமின் ஸ்கல்ட்ஸ் என்பவர் மொழிப்பெயர்த்து முடித்தார்.

=>.சீகன் பால்கு ஐயர் தமிழ்நாட்டில் உள்ள தரங்கம்பாடியில் தன் ஊழியங்களை செய்து, ஒரு சபையை கட்டியுள்ளார். அத்திருச்சபையில் இன்றும் ஆராதனை நடக்கிறது.
ஜெர்மனியிலிருந்து வந்த மிஷினரியான சீகன் பால்கு ஐயர் என்பவர் தான் தமிழ் மொழியில் வேதத்தை மொழிப்பெயர்த்தவர்.

=>.2 இராஜாக்கள் 19-ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஒரே சம்பவத்தையும் ஒரே மாதிரியான வசனங்களையும் கொண்டுள்ளது.

=>.இயேசுவின் பிறப்பில் பரிசுகள் கொண்டு வந்த மூன்று சாஸ்திரிகளின் பெயர்கள்.
1. மெல்கொயர் – பரிசு பொன்.
2. காஸ்பர் – பரிசு வெள்ளை போளம்.
3. பால்தாஜர் – தூபவர்க்கம் என்று கண்டுபிடித்துள்ளனர்.

=>.வேத பண்டிதர்கள் இயேசு கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டவர்கள் பெயர்கள்..
1. திஸ்மாஸ்
2. கெஸ்டாஸ் என்று கண்டு பிடித்துள்ளனர்.

=>.வேதத்திலே நான்கு விதமான பிறப்பு உள்ளது .
1. மண்ணிலிருந்து ஆதாம்.
2. எலும்பிலிருந்து ஏவாள்.
3. தகப்பனும் தாயும் சேர்ந்து பிள்ளைகள்.
4. கன்னியின் மூலமாய் இயேசு கிறிஸ்து.

=>.மாற் 14:51,52-ல் துப்பட்டியை போட்டுவிட்டு நிர்வாணமாய் ஓடின வாலிபன், அற்றூலின் ஆசிரியரான மார்குதான் என்று பரம்பரையாக நம்பிவருகின்றனர்.

=>.சாலமோன் கட்டிய தேவாலயம் ஏறக்குறைய 380 வருடங்கள் நிலைத்திருந்தது.

=>.சாஸ்திரிகள் கீழேகண்டநட்சத்திரத்தைகுறித்து மத்தேயு 2 –ம் அதிகாரத்தில் காண்கிறோம். இதே கால கட்டத்தில் வாழ்ந்த சீன (China) வானசாஸ்திரிகள் அப்படி ஒரு நட்சத்திரத்தை கண்டதாக குறிப்பு எழுதி வைத்துள்ளதை, சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.

=>.வேதத்திலே ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று மூன்றுமுறை சொல்லப்பட்டுள்ளது. (2 நாளா 20:7, ஏசா 41:8, யாத் 2:23

=>.கலகம் செய்பவர்களுக்கு மட்டுமே சிலுவை மரணம் கொடுத்தனர் ரோமர் குடியுரிமை பெற்றவர்களுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு.

=>.நான்கு சுவிசேஷங்களிலும் முதலாவது எழுதப்பப்பட்டது மாற்கு எழுதின சுவிசேஷமாகும்.

=>.இயேசு கிறிஸ்துவின் உவமைகள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் வேதத்திலே மில பழமையான மற்றும் முதலாவதாக வரும் உவமை நியாய 9:8-15-ல் உள்ள உவமையாகும்.

=>.தேவன் மனுஷனிடம் கேட்ட முதலாவது கேள்வி “நீ எங்கே இருக்கிறாய்?” ஆதி 3:9.

=>.யோர்தான் நதியினுடைய மொத்த நீளம் 321.86 கி.மீ ஆகும்.

=>.“தேவன்” என்கிற வார்த்தை எஸ்தர் மற்றும் உன்னதப்பாட்டு ஆகிய புத்தகங்களில் கிடையாது.

=>.தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா? “What hath God wrought?” Num 23:23 அதாவது “தேவன் என்னென்ன செய்தார்?” எண் 23:23.

=>.மோசே குழந்தையாக எஇடப்பட்ட நைல் நதியின் மொத்த நீளம் 3218.6 கி.மீ ஆகும். இதன் சராசரி அகலம் 1.5 கி.மீ.

=>.ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “ஐபிராத்து” (தற்போதைய பெயர் யூப்பிரடிஸ்) என்னும் நதியின் மொத்த நீளம் 2880 கி.மீ.

=>.ஏதேனிலிருந்து வரும் நதியாக சொல்லப்பட்ட “இதெக்கேல்” என்னும் நதியின் நீளம் 1844.2 கி.மீ.

=>.யோர்தான் நதி 3 முறை இரண்டாக பிரிந்தது
1. யோசு 4:7,19.
2. 2 இரா 2:8.
3. 2 இரா 2:13,14.

=>.வேதத்திலே சொல்லப்பட்டுள்ள மலைகளில் மிக் உயரமான மலை அரராத் மலை. இதன் உயரம் 5260.8 மீட்டர் ஆகும்.

=>.தங்கள் முகம் பிரகாசித்த 3 பேர்கள்
1. மோசே – யாத் 35:28-30
2. இயேசு – மத் 17:2
3.ஸ்தேவான் – அப் 6:25; 7:55,56

=>.வேதாகமத்திலே 3 நபர்களுக்கு “இயேசு” என்னும் பெயர் இருக்கிறது.
1. நம்முடைய தேவன் இயேசு – மத் 1:21.
2. கள்ளத்தீர்க்கதரிசியான பர்யேசு – அப் 13:6.
3. யுஸ்து என்னப்பட்ட இயேசு – கொலோ 4:11.

=>.“அப்பா பிதாவே” என்று புதிய ஏற்பாட்டில் மூன்று முரை வருகிறது – மாற் 14:36, ரோம 8:15; கலா 4:6.
லேவியராகமத்தில் “தேவனாகிய கர்த்தர்” என 21 தடவை வருகிறது – லேவி 11:44; 18:4,30; 19:3,4,10,25,31,34,36; 20:7,24; 23:22,43; 24:22; 25:17,38,55; 26:1,13,44.

=>.லேவியராகமத்தில் “கர்த்தஎ” என்கிற வார்த்தை 21 தடவை வருகிறது. லேவி 11:45, 18:5,22; 19:12,16,18,28,89,32,37; 20:18; 21:12, 22:2,8,31,32,33; 26:2,45.

=>.யோபுவுக்கு 2 முறை 7 குமாரரும் 3 குமாரத்திகளும் பிறந்தார்கள் – யோபு 1:2, 42:13.

=>.‘எலியா’ என்ற பெயர் நான்கு நபர்களுக்கு இருந்தது
1. எலியா தீர்க்கதரிசி – 1 இராஜ 17:1, லூக் 9:30.
2. எரொகாமின் குமாரன் எலியா – 1 நாளா 8:27.
3. ஆரீமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:21.
4. ஏலாமின் புத்திரரில் எலியா – எஸ்றா 10:26.

=>.ஜெபம் பண்ணி வானத்திலிருந்து அக்கினியை வரவைத்தவர்கள் 3 பேர்கள்
1. எலியா – 1 இராஜ 18:37,38.
2. தாவீது – 1 நாளா 21:25,26.
3. சாலொமோன் – 2 நாளா 7:1.

=>.“ஜீவ விருட்சம்” என்ற வார்த்தை, வேதத்தில் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தில் 3 முறையும் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தலில் 3 முறையும் வருகிறது. ஆதி 2:9; 3:22,24. வெளி 2:7; 22:2, 14.

=>.சங்கீத புஸ்தகத்தில் 5 அதிகாரங்கள் 5 வசனங்களை கொண்டுள்ளது – சங் 15,70,93,100,125.

=>.யூதர்கள் பழைய ஏற்பாட்டை (Torah) தோரா, நெபீம் (Nebiim), கெத்தூபிம் (Kethubim) என்று 3 பகுதிகளாக பிரித்துள்ளனர்.

=>.தந்தி முறையை (Telegraph) கண்டுபிடித்த Samuel.F.B Morse முதல் முதல் அனுப்பிய வார்த்தைகள் என்ன தெரியுமா?
What hath God wrought ? – Num 23:23.

=>.தேவன் என்னென்ன செய்தார்? – எண் 23:23.
இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்த ஒரே பெண் நியாயாதிபதி தெபொராள் ஆகும் – நியா 4:4.

=>.பேய் என்ற வார்த்தை பழைய ஏப்பாட்டில் 3 முறை வருகிறது – லேவி 17:7; உபா 32:17; 2 நாள 11:15.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics