கணவன் மனைவி

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.

கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன,

இடியும் மின்னலுமாய் இருக்கிறது,

படகு ஆடுகிறது,

அவரின் மனைவி நடுங்குகிறாள்,

அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்
"உங்களுக்கு பயமாக இல்லையா" என்று.

கணவன் ஒன்றுமே சொல்லாமல்,

தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார்.

அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள்.

கணவன் "இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?" என்று.

அதற்கு அவள் சொல்கிறாள்

கத்தி பயங்கரமானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர் அதனால் பயமில்லை" என்று.

கணவன் புன்முறுவலோடு
"இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும், பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும்

இயேசு  , என் அன்புக்குரியவர்,
அதனால் எனக்கு பயமில்லை என்கிறார்.

"எவ்வளவு 'நம்பிக்கை "

இது தாங்க விசுவாச வாழ்க்கை...👍😊

🎸steve

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*