எதார்த்தமான உண்மைகள்:

எதார்த்தமான உண்மைகள்: 😜😜👇👇

1. கல்லுக்கு உருவம் கொடுக்கும் வரை நான் சிற்பி, நீ கல்.,  உருவம் கொடுத்தபின்பு நீ கடவுள், நான் தீண்டத்தகாதவன்..! 

(நம்ம ஊரு டிசைன் அப்படி)

2. கும்பிடும் வரை கடவுள்; திருட்டுப் போனால் சிலை !!

(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)

3. எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!

(மிகச் சிரியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமா இருக்கிறது இந்த எறும்புக்கு தான்)

4. தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது!!!

(ஆகவே ஆகாது... கண்பார்ம்டு)

5. ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம்!!

(மரணம் ஒரு முடிவு அல்ல... !)

6. வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !!

(நிதர்சனமான உண்மை)

7. அவசரத்துக்கு ஒரு கொத்தனாரைக் கூட  தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல, தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!  ஏன் இந்த கொடுமை..!!!

(ஊருக்கு ரெண்டு இன்ஜினீயரிங் காலேஜ் தான் காரணம்)

8. இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!.

(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)

9. இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!

(எல்லாம் பீஸ் தான் காரணம்)

10. இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)

11. 250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

(லஞ்சம் தான் காரணம்)

11. மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்...!!!

(யூஸ் பண்ணத் தெரியல..அவ்ளோதான்)

12. தூக்கம் வராமல் முதலாளி... தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!!!

(கரன்சி பண்ற வேலை)

13. கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் உங்களுக்கு தெரிவதில்லை..!!!

(இது மனிதன் செய்த தவறு என்பதில் சந்தேகமே இல்லை)

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*