Church 2017
ஒரு திருச்சபையின் போதகர், அச்சபையின் எழுப்புதலுக்காக எவ்வளவோ பாடுபட்டார். இரவு பகலாக உழைத்தார். ஆனால் அந்த சபை மக்கள், இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறைக் கொள்ளாதவர்களாக, ஆலயத்தையே புறக்கணித்துவிட்டு, தங்கள் பாவ வழிகளிலேயே ஜீவித்து வந்தனர்.
ஒருநாள் ஆலயத்தின் கோபுர மணி, சாவைக் குறித்து அடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட சபை மக்கள், ""யாரோ மரித்துவிட்டார்கள் என்று எண்ணி, அக்கம் பக்கம் விசாரித்தார்கள். மரித்த நபர் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எனவே, ஆலயத்திற்கு விரைந்து வந்தார்கள். அங்கே ஒரு பிரேதப் பெட்டி அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. போதகரிடம் விரைந்து வந்து கேட்டார்கள். "ஐயா யார் மரித்துவிட்டது?'' அவர் சொன்னார் "திருச்சபைதான் மரித்து விட்டது. நீண்ட காலம் அது சுகவீனமாகி, புறக்கணிக்கப்பட்டு, கடைசியில் மரித்துவிட்டது. பிரேதப் பெட்டிக்குள் இருக்கும் உங்கள் திருச்சபையைக் கண்டு கடைசி அஞ்சலி செலுத்தி விட்டுச் செல்லுங்கள்'' என்றார்.
சபையார் பிரேதப் பெட்டிக்குள் திருச்சபையைப் பார்த்தபோது, உள்ளே ஒவ்வொருவரின் முகமும் தெரிந்தது. ஏனெனில் பெட்டியின் அடியில் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி பதிக்கப்பட்டிருந்ததே காரணம். விசுவாசிகளின் ஆத்மீக மரணம்தானே, சபையின் மரணம்? நீங்கள் உயிருள்ளவர்களென்று பெயர் கொண்டும் செத்தவர்களாயிருக்கிறீர்களா?
"நீ விழித்துக்கொண்டு சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை'' (வெளி. 3:2)
Comments
Post a Comment