சில பொய்யான செய்திகள், தவறான தகவல்கள்
இப்போதெல்லாம் நவீன தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியால் சமூக வலைதளங்களான முகநு}ல் (ஃபேஸ்புக்), வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்றவற்றின் மூலமாக எந்தவொரு செய்தியானாலும், தகவலானாலும் உடனுக்குடன் மக்களை சென்றடைந்து விடுகிறது. இது நல்ல விஷயமாக இருந்தாலும், பல பொய்யான செய்திகளையும் தவறான தகவல்களையும் சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு பரப்பிவிடுகின்றனர்.
அந்த வகையில் இதுவரையில் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கும் சில பொய்யான செய்திகளையும், தவறான தகவல்களையும் காண்போம்.
🎼 ஜனகண மன பாடல் யுனெஸ்கோவால் சிறந்த தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது.
- தவறான தகவல்.
🎭 பீமன் மகனான கடோத்கஜனின் நிஜமான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
- தவறு. அது ஒரு சினிமா செட்.
🍹 குளிர்பானத்தில் எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் பரவி விட்டது.
- இந்த முறையில் எய்ட்ஸ் பரவாது. குளிர்பானங்கள் முழுவதும் இயந்திரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
📵 இன்று இரவு காஸ்மிக் கதிர்கள் தாக்கும் செல்போன் ஆப் பண்ணுங்க என நாசா அறிவிப்பு.
- பொய். இண்டர்நெட் ஸ்பீட் இல்லாத ஒருத்தரால் வதந்தியாக அனுப்பப்பட்டிருக்கலாம்.
👤 இந்தக்குழந்தையின் புகைப்படத்தை ஷேர் செய்தால் ஃபேஸ்புக் ஒரு ரூபாய் கொடுக்கும்.
- ஒருஷேர்க்கு ஒரு ரூபாய்னா, எத்தனைக் கோடி கொடுக்கனும்? யோசிக்கணும்...
👉 இந்தச் சாமி படத்தைப் பகிர்ந்தால் நல்லது நடக்கும்.
- எப்படி நடக்கும் என ஒரு நிமிஷம் யோசித்தது உண்டா?
📲 இந்த லிங்க்கை ஷேர் செய்தால் 3 ஜி.பி இலவச டேட்டா கிடைக்கும்
- இருக்கின்ற டேட்டாவும் குறைவதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.
👥 குழந்தையைக் காணோம்.
- உண்மையான தகவலாக இருக்கலாம். ஆனால், எப்பவோ நடந்த செய்தியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. அக்குழந்தைக் கிடைச்சு, இப்போ காலேஜ் போய்க்கொண்டிருந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. தௌpவான தேதி குறிப்பிட்டால் நம்பந்தகுந்ததாக இருக்கலாம்.
💉 ஆபரேசனுக்கு ரத்தம் வேணும்.
- தேதி, நேரம் எதுவுமே இல்லாமல் வரும் தகவல்கள் நம்பந்தகுந்ததல்ல.
💐 இந்தத் தகவலை 18 பேருக்கு அனுப்பு. இந்த கடவுள் நல்லது செய்வார். இல்லனா கெட்டது நடக்கும்.
- மனதளவில் தாக்கம் ஏற்படுத்துவதற்கான தகவல்கள் இது. உங்களின் பயத்தை தவறுதலாக பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி இது.
📱 இந்த தகவலை 10 குரூப்க்கு அனுப்பிட்டு பேலன்ஸ் செக் பண்ணு.
- எப்படி ஏறும்? உங்க டேட்டா பேலன்ஸ்தான் குறையும்.
இதுமட்டும் இன்றி இதுபோன்ற போலி தகவல்களை பார்வேர்ட் செய்யும் நண்பர்களே, கிடைச்சா கிடைக்கட்டும், அனுப்பி பாப்போம்னு அனுப்பாதீர்கள். எப்போதாவது வாட்ஸப் உபயோகிக்கும் நண்பர்கள், புதிதாக மொபைல் உபயோகிக்கும் நண்பர்கள், தயவு செய்து எந்த மெசேஜ்யும் பார்வர்ட் செய்யாதீர்கள். ஒரு மாதம் அனைத்து மெசேஜ்யும் படியுங்கள். உங்களுக்கே புரியும்.
எனவே நீங்கள் வாட்ஸ்ஆப்பில் அல்லது ஃபேஸ் புக்கில் அனுப்பும் ஒவ்வொரு செய்தியையும், ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள். தேவையற்ற, வீண் பழி சுமத்துகின்ற, நம்பகத்தன்மையற்ற செய்திகள் உங்களை வந்து சேர்ந்தால்கூட பரவாயில்லை. அடுத்தவருக்கு சேரும்படி ஷேர் செய்யாதீர்கள்.
Comments
Post a Comment