ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர்ச்சி அடைய சில ஆலோசனைகள்
ஆவிக்குரிய ஜிவியத்தில் வளர்ச்சி அடைய சில ஆலோசனைகள்
1) தினசரி 5 அதிகாரம் குறைந்தது படிக்க வேண்டும் (படிக்கிறவர்கள்/வேலைக்கு செல்கிறவர்கள்)
2) தினசரி 1 சங்கிதம் படிக்க வேண்டும்
3) தினசரி 1 நீதிமொழிகள் படிக்க வேண்டும் (31 நாட்கள 31 நீதிமொழிகள்)
4) தினசரி 1 வசனம் மனப்பாடம் செய்ய வேண்டும் (அதை diary ல் எழுதி வைக்க வேண்டும்) அடிக்கடி அதை படித்து உள்ளத்தில் பதித்து வைத்து கொள்ள வேண்டும் (நான் சாப்பிடும் போது அந்த diary எனது dinning table ல் இருக்கும். சாப்பிடும் முன்னால் 3 வசனத்தை மருபடியும் மனப்பாடம் செய்து சாப்பிடுவேன். (மனுஷன் அப்பத்தினால் ..... பிழைப்பான்- உபா 8:3) வசனம் வேதத்தில் இருக்க கூடாது. உள்ளத்தில் இருக்க வேண்டும் சங் 119:11
5) ஆலயத்தில் கேட்கிற சத்தியங்கள/புத்தகத்தில் படிக்கிற சத்தியங்களை நோட்டில் எழுதி வைத்து கொள்ள வேண்டும். சமயம் கிடைக்கும் போது அதை திரும்ப பார்க்க வேண்டும்.
6) தினசரி அரை மணி நேரம் கர்த்தரை சத்தமாக துதிக்க வேண்டும் (இதை காலையில் செய்ய வேண்டும்)
7) தினசரி குறைந்தது 1 மணி நேரம் ஜெபிக்க வேண்டும்
8) தினசரி 2 பாடல் குறைந்தது பாட வேண்டும்
9) நல்ல ஆவிக்குரிய நண்பர்கள் உடன் நட்பு கொள்ள வேண்டும்
Comments
Post a Comment