கத்தோலிக்க நண்பன் எழுதுகிற கண்ணீர் மடல்
என் அன்பு கத்தோலிக்க சகோதரனுக்கு உன்னுடைய முன்னாள் கத்தோலிக்க நண்பன் எழுதுகிற கண்ணீர் மடல்
நான் மோசமானவனாய் இருந்தபோதும்,
நாம் இரண்டுபேரும் சேர்ந்து பாவம் செய்யும்போது கூட என்னுடைய பேச்சை கேட்டாய் ஆனால் இப்போது ஆண்டவரின் பிள்ளையாக மனம்மாறி தேவனுடைய வார்த்தையை பேசும்வரும்போதெல்லாம் என்னை வெறுக்கிறாய். இப்போது என்னை பார்ப்பதையே தவிர்த்து விட்டாய். அதனாலே தான் இந்த கடிதம் இதையும் தூக்கிவீசிவிடாதே...
இது சாதாரண கடிதம் என்று எண்ணிவிடாதே என்னுடைய இருதயத்தில் இருந்து கசிந்த இரத்த துளிகள் இந்த வரிகள்.
என்னுடைய நண்பன் பாதாளத்துக்கு செல்லகூடாது என்று கண்ணீர்விட்ட
நாட்கள் எத்தனையோ...
என்னுடைய வார்த்தைக்கு நீ கொடுக்கும்
கடைசி மரியாதை என்று நினைத்து சற்று பொருமையுடன் படித்து பார்....
நீ யாரை விசுவசிக்கிறாய்..!!
யாருடைய வார்த்தையின்படி நடக்கிறாய்..!!
கிருஸ்துவன் என்று சொல்கிறாய்
கிருஸ்துவின் வார்த்தையை நம்புகிறாயா..!!
விவிலியத்தை வைத்திருக்கிற நீ அதிலே
உள்ள வார்த்தை ஆண்டவருடையது
என்று நம்புகிறாயா..!!
நீ பண்ணுகிற ஜெபம்,
நீ பண்ணுகிற ஜெபமாலை,
நீ கொண்டாடுகின்ற திருவிழா,
நீ கொண்டாடுற கல்லறைதிருவிழா,
நீ பண்ணுகிற பாவசங்கீர்த்தனம்,
நீ காண்கின்ற பூசை,
நீ கடைபிடிக்கின்ற தபசுகாலம்,
நீ பண்ணுகிற மனபாட மந்திரம்,
நீ போடுகிற மொட்டை காவி உடை,
நீ போகிற புனித யாத்திரை,
நீ போற்றுகிற புனிதர்கள் வழிபாடு,
இவைகள் எல்லாம் உன்னுடைய விவிலியத்தில் இருக்கிறதா என்று என்றைக்காவது பார்த்ததுண்டா?
ஆண்டவருக்கு பிடித்தமானதைதான் செய்கிறோமா என்று விவிலியத்தில் படித்துபார்த்திருக்கிராயா?
நீ என்னை நம்பவில்லை என்றாலும்
பரவாயில்லை உன் ஆண்டவர் கொடுத்த
விவிலியத்தை நம்பு.
மனுஷன் பொய்சொல்லலாம் ஆனால் ஆண்டவருடைய வார்த்தைகள் ஒருபோதும் பொய்சொல்வதில்லை.
ஒரு முக்கியமான விசயம் நீ உன் சபையிலே இதுபற்றி கேட்டால் நீ அனுசரிக்கிற அத்தனைக்கும் விவிலியத்தில் இருப்பது போல அதிலே உள்ள சம்பவங்களை மட்டுமே
காட்டுவார்கள். ஆனால் சம்பவங்கள் அனைத்தும் நமக்கு
படித்து அறிந்து கொள்ளதான்.
நாம் செய்யவேண்டியதை கட்டளைகளாக விவிலியத்தில் கொடுக்கபட்டுள்ளது.
சம்பவங்களை பார்த்து ஏமாந்து போகாதே...!!
எச்சரிக்கை...!! எச்சரிக்கை..!!
சில உதாரணங்கள்:-
மரியாள் நமக்காக பரிந்துபேசுவாரா?
என்று கேட்டால் கானாவூர் கல்யாணத்தை சொல்வார்கள். நமக்கு கொடுக்கபட்ட கட்டளைகளில் பரிந்துபேசுவது மரியாள் என்று எங்கே இருக்கிறது என்று கேட்டுபார்?
இயேசுவுக்கு சிலை செய்யலாமா?
என்று கேட்டால் இயேசு உருவத்தோடுதானே இருந்தார் என்பார்கள் விவிலியத்தில் இயேசுவுக்கு சிலை செய்யசொன்னாரா ஒரு வசனம் காட்டசொல்லு பார்ப்போம்
செத்தவர்களுக்கு கல்லரையிலே மாலை, மெழுகுவர்த்தி,ஊதுபத்தி, ஒரு பூசை வைத்தால் பரலோகமா?
யோசிச்சு பாரு நூரு ரூபாய் செலவுசெய்து
இதெல்லாம் வாங்கிவைத்தால் பரலோகம் என்றால் மனிதன் எப்படி வேண்டுமானாலும் வாழலாமே பைபிள் எதற்கு?
இப்படி எல்லாவற்றிலும் நாம் ஏமாற்றபடுகிறோம்.
எச்சரிக்கை...!! எச்சரிக்கை..!!
ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்
மரியாளையோ,புனிதர்களையோ போற்றுவதாலோ,நினைவு கூறுவதாலோ நமக்கு என்ன பயன் என்று ஒருவசனம் காட்டசொல்லு பார்ப்போம்
ஆண்டவர் யாரை வாழ்த்தினாரோ அவர்களை போல நாமும் ஆண்டவரிடம் வாழ்த்து பெறவேண்டும் என்பதற்காகவே விவிலியத்தில் கொடுக்கபட்டுள்ளது. நாம் அதைவிட்டுட்டு வாழ்த்துபெற்றவரை தினமும் வாழ்த்திகொண்டு இருப்பதால் யாருக்கு என்ன பயன் சிந்திப்பாயா..!!
மீண்டும் சொல்கிறேன்
என்னை நம்பவேண்டாம்
போப்பை நம்பவேண்டாம்
பாதரை நம்பவேண்டாம்
பைபிளை மட்டும் நம்பு நம்புவாயா..!!
இப்படிக்கு
உன்னுடைய மனமாற்றத்தை விரும்பும்
இயேசுதாசன்
‼ இன்னும் அறிந்துகொள்ள கத்தோலிக்கர்களின் கனிவான கவனத்துக்கு என்கிற பேஜை பேஸ்புக்கில் பாருங்கள் ‼
Comments
Post a Comment