ஒரு போதகரின் மனக்குரல்

🗣சபையில் கோவப்பட்டு😤, choir உறுப்பினராய் இருப்பதிலிருந்து நின்றுவிட்டீர்கள், சபையில் உதவி செய்வதை விட்டுவிட்டீர்கள், சபையை சுத்தப்படுத்துவதையும் மற்ற வேலைகளையும் நிறுத்திவிட்டீர்கள்....

இறுதியில் சபைக்கு போவதை நிறுத்திவிட்டீர்கள் காரணம் உங்களுக்கு பிடிக்காதவாறு ஒருவர் உங்களிடம் பேசிவிட்டார்........

உங்கள் கருத்துப்படி பிரசங்கமேடையிலிருந்து வந்த அநேக செய்திகள் உங்களுக்கு எதிரானதாக இருந்தது....

நீங்கள் சுகவீனமாயிருக்கும்போது யாரும் உங்களை அழைக்கவில்லை, உங்கள் கருத்துப்படி, "சபை உங்களிடத்தில் அன்பு செலுத்துவதோ, கவனிப்பதோ இல்லை...."

சபைக்கு சென்றேன் நான் எதிர்பார்த்து ஜெபித்தேன், பாஸ்டரும் ஜெபித்தார் ஒன்றும் நடக்கவில்லை எனவே வேறு கடை(சபை) தேடுகிறேன்.....

ஆனால் தயவாக மன்னிக்கவும்.........

உங்களை தரம் தாழ்த்தி அதிக நேரம் பேசும் உங்கள் முதலாளிக்காக வேலை செய்வதை நீங்கள் நிறுத்தவில்லை, உங்களுடன் பனிபுரியும் நண்பர் உங்களை பற்றி தவறாக பேசியதற்காகவோ நீங்கள் வேலையை விட்டு நிற்கவில்லை.  (பணமே காரணம்........)

நீங்கள் சுகவீனமாயிருக்கும்போது🤒, உங்கள் முதலாளி உங்களை அழைத்து விசாரிக்கவோ, வேலையில் உங்களை தேடவோ நீங்கள் காத்திருக்கவில்லை. நீங்களே அவரை அழைத்து உங்கள் நிலமையை விவரித்தீர்கள். அவர் உங்களை நேரில் சந்தித்து விசாரிக்காத்தை பற்றி புகார் அளிக்கவில்லை. (கேள்வி வரும் என்ற பயம் அல்லது வேலை இழப்பு பற்றிய பயம்)...

உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா பள்ளியில், உங்கள் ஆசிரியர்கள், உங்களுடன் பயிலும் மாணவர்கள் ஏன் உங்கள் நெருங்கிய நண்பர்கள் கூட உங்களை காயப்படுத்தினர், ஆனால் நீங்கள் படிப்பை நிறுத்தவில்லை............

சபைக்கு வராமல் இலகுவாக தவறவிடுகிறீர்கள், ஆனால் கல்லூரி விரிவுரையை தவறவிடுவதில்லை காரணம் அவர் வருகை பதிவேட்டில் கணக்குவைப்பார் அது உங்கள் மார்க்கை பாதிக்கும்...........

தேவனை சபையில் சந்திக்க காலதாமதமாக வருவார்கள் ஆனால் விசா நேர்முகபேட்டிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே தூதரகத்தில் காத்திருப்பீர்கள்..........🤔

கொடுத்த மாத்திரை சரியில்லையென டாக்டரை மாற்றுவீர்கள், முடி ஒழுங்காக வெட்டுவதில்லை என சலூன் கடையை மாற்றுவீர்கள், ஆனால் நண்பரே உன் பெற்றோர் நீ கேட்ட அநேக விஷயத்தை தரவில்லை என அப்பா, அம்மாவை மாற்றுவாயோ............சபை என்ன மளிகை கடையா.....

யாரை ஏமாற்றுகிறீர்கள்?

நாங்கள் உங்களை அதிகமாக பழித்து கூறவில்லை உங்களுக்கு சபையை பற்றிய வெளிப்பாடு போதுமானதாகவே அல்லது அறவேயில்லை....

தயவாக, என்னை கேளுங்கள்! சபையானது உங்களை,உங்களை மாத்திரம் பிரியப்படுத்தும்படி எல்லாம் செயல்படுத்தும்படி நீங்கள் பங்குவகிக்கின்ற "ஒருவரையும் காயப்படுத்தா சங்கமல்ல".....

நீங்கள் மற்றவர்களின் பிரயோஜனத்திற்காக என்ன செய்திருக்கிறீர்கள்?

வேத வாக்கியங்களின் படி எல்லாரும் பெற வேண்டிய சபையை பற்றிய அறிவானது.....அது தேவனுடைய வீடு மற்றும் வானத்தின் வாசல்......ஆதியாகமம் 28:17.

உங்கள் உற்சாகம் உங்களை அங்கே கொண்டு போகலாம். ஆனால், உங்கள் இரட்சிப்பும், தேவ ஆவியால் நடத்தப்பட்ட வாழ்க்கையே நீங்கள் பரலோகத்திற்குள் போவீர்களோ இல்லையோ என்பதை தீர்மானிக்கும்....

நீங்கள் தேவனுக்காக சேவை செய்வது, பயபகத்தியோடும், கனத்தோடும், மரியாதையோடும், கண்ணியத்தோடும் இருக்கட்டும்....

தேவன் உங்களை பார்க்கிறார்...... உங்கள் மனப்பாங்கை(attitude) மாற்றுங்கள்....

துக்கத்தோடே ஒரு போதகரின் மனக்குரல்......(எபிரேயர் 13:17)

Comments

Post a Comment

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics