காதலா? மோகமா?

காதலா? மோகமா?

காதல் என்ற பெயரில் மோகத்தில் சிக்கி தவித்து கொண்டிருப்பவர்களுக்கான தீர்க்கதரிசன செய்தி இது. இதை தியானிப்பதற்கு முன்பு 2 சாமுவேல் 13-ம் அதிகாரத்தை பல முறை நன்றாக தியானியுங்கள்.
               
ஒரு மனிதனை பல ஆவிகள் தாக்கி காதல் எனும் வலையில் சிக்க வைக்கும். இச்சையினால் வரும் காதல் இனக்கவர்ச்சி எனப்படும். மோகத்தினால் வரும் காதல் சரீர சுகத்திற்கான காதல் ஆகும்.

காமவிகாரத்தினால் வரும் காதல் முறையற்ற காதல் ஆகும். அடிமைத்தனத்தின் ஆவியால் வரும் காதல் ஒருதலை காதல் எனப்படும்.
              
இவை அனைத்தும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். உண்மையான காதல் போன்று தெரியும். ஆனால் உண்மையல்ல.

தேவசமூகத்தில் ஆராய்ந்து பார்த்தால்தான் தெரியும்.

மோகத்தில் சிக்கிய ஒரு வாலிபனை குறித்து  வேதத்தில் 2 சாமுவேல் 13-ம் அதிகாரத்திலில் உள்ளது

இவன் தாவீது இராஜாவின் மகன். நாட்டின் இளவரசன். இவன் தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் மோகம் கொண்டான் என்று வேதம் கூறுகின்றது.(வசனம் 1)
           
மோகம் ஒரு மனிதனுக்குள் இருந்தால் உறவும், வயதும் தெரியவே தெரியாது.  சகோதரி முறை வரும் பெண்மீது ஏற்படும் காதலும், 15 வயதுள்ள மாணவி மீது 30 வயதுள்ள மனிதன் காதல்  வயப்படுவதும், திருமணமான வாலிபனை வாலிப இளம் பெண் காதலிப்பதும் இதன் மோகத்தின் வெளிப்பாடு. இதை வாசிக்கின்ற தேவபிள்ளையே இப்படிப்பட்ட காரியங்களில் சிக்கியிருந்தால் இது காதலல்ல மோகம் என்பதனை உணர்ந்துகொள்.
        
அம்மோன் தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கம் கொண்டு வியாதிப்பட்டானாம்.(வசனம் 2). அவனுக்கு வந்ததே தகாத காதல் இதில் ஏக்கம் வேறு, அதிலும் வியாதியும் கூட வந்தது. ஆம் மோகம் இப்படித்தான் முறையற்ற காரியங்களில் ஏக்கம் கொள்ளவைக்கும்.
           
பக்கத்து வீட்டு திருமணமாகாத வாலிப பையன் என்னிடம் பேச மாட்டேங்கிறான், பழகமாட்டேங்கிறான்   என்று திருமணமான கனவனையுடையே நீ ஏக்கங்கொண்டால் அது காதலல்ல மோகம் .
          
எனக்கு பாடம் சொல்லி தருகின்ற டீச்சர் லூக்காக இருங்காங்க … எங்க டீயுசன் சார் என்னை ஒரு மாதிரி பார்க்கின்றாரு என்று நினைத்து அவர்கள் மேல் ஏக்கமாக இருந்தால் அது மோகம்.
        
பக்கத்து வீட்டு ஆண்டியுடன் பைக்கில் சுற்றனும், காரில் செல்லனும் என்று ஏங்கினால் அது மோகம். எங்க பெரியப்பா பையனே லவ் பண்றேன் கட்டினால் அவனேதான் கட்டுவேன் என்று டையலாக் வீட்டால் அது மோகம்
      
வீட்டிலே எங்களே சேரவிடமாட்டாங்க … எங்கள் முறை சரியில்லை வயது வித்தியாசம் அதிகம் இருக்கு அதனாலே ஓடிபோய் கல்யானம் பன்னப்போறோம் என்று யோசித்துகொண்டிருந்தால் அது மோகம்.
       
இவ்வாறு மோகம் எது? காதல் எது? என்று  தெரியாமல் இன்றைய வாலிப கண்மனிகள் பந்தாடப்படுகின்றார்கள். அவர்களுக்கு சொல்லிகொடுக்க ஆள்  இல்லை…
        
அம்மோன் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீது இராஜாவின் மகன் . அவன் மேல் தேவன் வைத்தே கிருபையினால் தன் சகோதரிக்கு , கண்னிகையான  தன் சகோதரிக்கு பொல்லாப்பு செய்ய கூடாது என்ற எண்ணத்தை தேவன் கொடுத்தார். ஆனால் அவனுக்கு இருந்த கெட்ட நண்பன் வழிவிலகச்செய்தான்.   
          
ஒரு வேளை வாலிப தம்பி, வாலிப தங்கச்சி நீ மோகத்தில் சிக்கி கொண்டிருக்கலாம். அதிலிருந்து தப்பிகொள்ள தேவன் கிருபையாய் உனக்கு நல்ல நண்பர்களையும், நல்ல சபையும், நல்ல போதகர்களையும், நல்ல தகப்பன்மார்களையும், தாயையும், கண்டித்து உனர்த்தும் சகோதரர்களையும். தீர்க்கதரிசன வார்த்தைகள் என்ற இந்த ஊழியத்தையும் உனக்கு நண்பராக கொடுத்திருக்கலாம். வார்த்தை கடினமாக உள்ளது என்று இழந்து போகாதே. வார்த்தையை ஏற்றுகொள் மோகத்தில் இருந்து விடுதலை பெறுவாய்
                
மகா தந்திரவாதியான அவன் நண்பன் கொடுத்த ஆலோசனை அவனை கெடுத்துவிட்டது. அவன் கொடுத்த ஆலோசனை என்ன? அவளை தனியாக அழைத்து அவளுடன் தப்பு செய்ய வேண்டும் என்பதே… இது தேவனிடத்திலிருந்து வந்ததல்ல பிசாசின் ஆலோசனையாகும். இப்படி ஆலோசனை கொடுக்கும். நண்பர்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களை கட் பண்னிவிடுவது நலம்.
      
அவள் எப்போது தனியாக இருப்பாள் என்ற சிந்தனை யாரை குறித்தோ இருக்கும்மென்றால் தேவ பிள்ளையே எச்சரிக்கையாக இரு… தாமாரை போன்று ஒன்றுமறியாதே சகோதரிகளுக்கு சொல்லும் ஆலோசனை என்னவென்றால் உன்னை யாராவது தனிமையான இடத்திற்கு அழைத்தால் அதுவும் அண்ணனாக இருந்தாலும் சரி எச்சரிக்கையாக இரு…
             
வேடனுடைய கண்ணியில் சிக்கிகொள்ளாதே …..நீ ஜெபிக்கின்ற பிள்ளையாக வேதம் வாசிக்கின்ற பிள்ளையாக இருந்தால் , பிசாசு கொண்டு வரும் தந்திரங்களை ஆவியானவர் வெளிப்படுத்துவார்…. ஒழுங்காக தினமும் ஜெபம் செய்.    
        
தனிமையான அறை வீட்டிற்க்குள் அழைத்து சென்ற அம்மோன் தன் சகோதரியாகிய தாமாரை பார்த்து என்னோடு சயனி என்றான் என்று சத்திய வேதம் கூறுகின்றது.  (வசனம் 11) அது மோகம் பிசாசின் ஆலோசனை ஆகும்.
         
அம்மோன் சூழ்ச்சி தெரியாமல் அண்ணன்தானே என்று சென்றால் தாமார். அவன் எல்லோரையும் துரத்திவிட்டு தனியறைக்குள் கூட்டி சென்றான்.
             
மோகம் அப்படித்தான் தனிமையை விரும்பும். உறவினர்கள் பெற்றோர்கள் கூட இருப்பதை வெறுக்கும். தான் காதலிக்கும் பெண் தன்னோடு கூட இருந்தாலும், ஆளில்லாத தனிமையான இடம் எங்கே இருக்கு என்று சுற்றி பார்க்கும் …….. இது மோகம்
        
காதலிக்கின்றேன் என்று சொல்லுகின்ற நீங்கள் தனிமையான இடத்திற்கு எங்கெங்கோ சுற்றுகின்றீர்களா? பீச், பார்க் என்று இடம் தேடி திரிகின்றீர்களா?
இது காதலல்ல மோகம்………மோகம்……….மோகம்
                
வெட்கமே இல்லாமல் தனக்கு உரிமையில்லாத, சட்டப்படி திருமணத்தின் படி உரிமையாகாத பெண்ணை பார்த்து என்னோடனே உறவு கொள் என்று சொல்வது மோகம்… காதலல்ல
         
நான் உன்னை நேசிக்கின்றேன் ….. நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது… நீதான் என் உயிர்….. எப்போதும் உன் நினைவுதான்…. என்று ஆசை வார்த்தைகளை கூறி திருமணத்திற்கு முன்பாக உறவு கொள்ளும் நோக்கத்தில் பேசி பழகுவதும், தொட்டு பேசுவதும் காதலல்ல மோகம்………மோகம்……….மோகம் ஏமாந்துவிடாதே வாழ்க்கையை இழந்துவிடாதே…
          
வாலிப பிள்ளையே! தாமாரை போன்று ஒன்றுமறியாத பிள்ளையே உனக்கு  தேவன் தரும் ஆலோசனை என்னவென்றால் எவ்வளவோ ஆசை வார்த்தைகளை கூறி, கெஞ்சி, ஒரு தடவைதான் இனி வேண்டாம் என்று எந்த மடையனாவது திருமணத்திற்கு முன்பாக உறவு கொள்ளும் நோக்கத்தில் உன்னை அழைத்தால் சம்மதிக்காதே…     சம்மதிக்கவே…… சம்மதிக்காதே…
               
அந்த மடையனை விட்டு பிரிந்து செல்வது உனக்கு நலம்…. உன் எதிர்காலத்திற்கு நலம்……….இல்லையேல் தாமாரின் நிலைதான்
        
அம்மோன் அவளுடன் சயனித்தபின்பு அவளை வெறுத்தான் என்று சத்திய வேதம் கூறுகின்றது.(வசனம் 15)  அவன் விரும்பின விருப்பத்தை பார்க்கிலும் அவன் வெறுத்த வெறுப்பு அதிகமாக இருந்ததாம்.
   
இது மோகம்……..இதனால்தான் காதலித்து கர்பமாக்கிவிட்டான் என்றே செய்தி அதிகமாக வருகின்றது… நிறைய திருமணம் காவல் நிலையத்தில் நடக்கின்றது…
        
தேவ பிள்ளையே எச்சரிக்கையாக இருந்து உன்னை ஆராய்ந்து பார் மோகம் இருக்கும்மென்றால் விடுதலை பெற ஜெபம் செய் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவிடம் உன் வாழ்க்கையை ஒப்புகொடு. உன் வாழ்க்கையை மாற்றுவார்……

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics